14.8 C
New York
Friday, October 4, 2024

Buy now

spot_img

Enga Kaatula Mazhai

தமிழில் மிக பெரிய வெற்றி பெற்ற படம் என்றால் குள்ளநரி கூட்டம் அதோடு சிறந்த விமேசனத்தையும் வாங்கிய படம் இந்த படத்தை இயக்கிய ஸ்ரீ பாலாஜி இயக்கத்தில் தற்போது வெளிவந்து இருக்கும் படம் எங்க காட்டுல மழை இந்த படத்தில் புதுமுகங்கள் நடித்து வந்து இருக்கும் படம் ஆறுமுக நாயகனாக மிதுன் மகேஸ்வரன் நாயகியாக சுருதி ராமகிருஷ்ணன் அப்புக்குட்டி, அருள் தாஸ், மற்றும் பலர் நடிப்பில் ஸ்ரீ விஜய் இசையில் சூர்யா ஏ.ஆர். ஒளிப்பதிவில் ஸ்ரீ பாலாஜி இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் எங்க காட்டுல மழை

ஊரை விட்டு சென்னைக்கு ஓடி வரும் நாயகன் மிதுன் மகேஸ்வரன், தனது நண்பன் அப்புக்குட்டியை தேடுகிறார். அப்புக்குட்டி எங்கு தங்கியிருக்கிறார் என்பது தெரியாமல் போகவே, தன்னுடன் பயணிக்கும் ஒருவருடன் நட்பாகி அவர் வீட்டிலேயே சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணனை பார்க்கும் மிதுன், ஸ்ருதி மீது காதல் வயப்படுகிறார். இதற்கிடையே அவரது நண்பன் அப்புக்குட்டியையும் கண்டுபிடித்துவிடுகிறார். அதேநேரத்தில் ஸ்ருதியும், மிதுனை காதலிக்க ஆரம்பிக்கிறார். இந்த நிலையில் அமெரிக்க டாலர்களை கடத்த, கடத்தல் கும்பல் ஒன்று திட்டம் போடுகிறது.

பணத்தின் மீது பேராசை கொண்ட போலீஸ் அதிகாரி அருள்தாஸ், அந்த பணத்தை கைப்பற்றுகிறார். அந்த பணத்தை எடுத்துச் செல்லும் போது, வழியில் வரும் மிதுன், அருள்தாசுடன் ஏற்பட்ட முன்பகை காரணமாக அந்த பணத்தை பிடிங்கிச் செல்கிறார். அதை வீட்டிற்கு கொண்டு வந்து பிரித்து பார்க்கும் போது, அதில் பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி கலந்த சந்தோஷம் அடைகிறார்.

பின்னர் அந்த பணத்தை அப்புக்குட்டியுடன் சேர்ந்து சந்தோஷமாக இஷ்டத்துக்கு செலவு செய்து வருகிறார். மேலும் அந்த பணத்தை அப்புக்குட்டி தங்கியிருந்த பழைய கட்டிடத்தில் குழி தோண்டி மறைத்து வைக்கின்றனர். கொஞ்ச நாள் கழித்து அங்கு இடத்திற்கு திரும்பி வரும் போது, அந்த இடம் காவல் நிலையமாக மாறியிருக்கிறது.

கடைசியில், மிதுன், ஸ்ருதியை கரம்பிடித்தாரா? அருள்தாஸ், மற்றும் கொள்ளை கூட்டத்தில் இருந்து மிதுன் தப்பித்தாரா? காவல் நிலையம் இருக்கும் இடத்தில் உள்ள பணத்தை கைப்பற்றினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

எங்கேயும் எப்போதும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி, மேலும் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மிதுன் மகேஸ்வரன், இந்த படத்தில் ஒரு நாயகான அவருக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணன், தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் அவருக்கு ஒரு சிறந்த படமாகும். அவர் நாயகியாக வந்து ரசிக்க கவர முயற்சி செய்திருக்கிறார்.

கதாபாத்திரமாகவே மாறிவிடும் அருள்தாஸ் இந்த படத்தில் போலீஸாக வந்து ஸ்கோர் செய்திருக்கிறார். அப்புக்குட்டி காமெடிக்கு ஓரளவுக்கு கைகொடுத்திருக்கிறார்.

குள்ளநரி கூட்டம் படத்திற்கு பிறகு 7 வருடங்களுக்கு பிறகு காமெடி கலந்த த்ரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்ரீ பாலாஜி. காதல், காமெடி, த்ரில்லர் என அடுத்தடுத்த காட்சிகளில் பரபரப்பை கூட்ட முயற்சி செய்திருக்கிறார். படத்தில் நாய் பேசுவது போன்ற காட்சிகள் வித்தியாசமாக உள்ளது. குள்ளநரி கூட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு படத்தை பார்க்கும் போது அதற்கான தீனி இந்த படத்தில் கொஞ்சம் குறைவு தான் என்று சொல்ல வேண்டும். திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.

ஸ்ரீ விஜய்யின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். சூர்யா ஏ.ஆர். ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE