இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது,
‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மேல இருக்கறவன் பாத்துப்பான் என்று விடாமல், அறிவியல் புனைக்கதையை வைத்துத் தமிழில் படமெடுக்க வேண்டுமென்று தயாரிப்பாளரும், இயக்குநரும் மெனக்கெட்டு முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்று ட்ரைலர் பார்க்கும்போது தெரிகிறது. ஆரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பும் தெரிகிறது.
இப்ராஹிம் ராவுத்தர் நல்ல பெயர் சொல்லும் படங்கள் எடுத்தார். அவர் பெயரை சொல்லும் அளவிற்கு அவர் மகன் முகமது அபுபக்கர் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழில் இனிமையாக பேசிய கதாநாயகிக்கு வாழ்த்துக்கள் என்றார்.
நடிகர் ஆரி பேசும்போது,
ராவுத்தர் பிலிம்ஸ் அறிமுகமில்லாத பல இயக்குநர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். முகவரியில்லாத பலருக்கும் முகவரி கொடுத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் இப்படத்தில் ஒப்பந்தமாகும் நேரத்தில் நான் நடித்த ‘நாகேஷ் திரையரங்கம்’ வெளியாகவிருந்தது. அப்படம் வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் சம்பளத்தில் ஏற்ற இறக்கம் இருக்காது என்று கூறினார்கள் ராவுத்தர் பிலிம்ஸ் நிறுவனத்தார்கள். இந்த தலைமுறையில் ஏலியன் வைத்து எடுக்கும் படத்தில் நான் நடித்திருப்பதில் பெருமையடைகிறேன். இயக்குநர் கவிராஜ் கிராஃபிக்ஸ் பற்றிய அறிவு இருக்கிறது. அவர் பாதி கதைக்கூறும்போதே நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
அறிவியல் புனைகதைகள் மற்றும் ஏலியன் சார்ந்த விஷயத்தைப் படமாக்க ஹாலிவுட்டில் ரூ.1000/- கோடி செலவு செய்வார்கள். ஆனால், நாங்கள் அந்த தரத்திற்கு இணையாக EFX என்று சொல்ல கூடிய கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ஒரு வருடம் உழைத்திருக்கிறோம்.
அபுபக்கரின் கதாபாத்திரம் அவர் இயல்பு போலவே அமைந்திருக்கிறது. அவர் மூலம் இன்னும் பல இயக்குநர்கள் உருவாவார்கள் என்பதில் ஐயமில்லை.
என் குழந்தையை அமைதியாக்கி விட்டார் இயக்குநர் அமீர். அந்த யுக்தியை கையாண்டு சட்டசபையிலும் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யா பேசும்போது,
இந்த படத்திற்காக அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். பொதுவாக இசையமைப்பாளர்கள் படப்பிடிப்புத் தளத்திற்கு வரமாட்டார்கள். ஆனால், எனக்கு படப்பிடிப்பு தளத்திற்கு செல்வது மிகவும் பிடிக்கும். அங்கு ஒவ்வொருவரின் கடின உழைப்பையும் பார்த்தேன். எனது தந்தை இளையராஜாவிடம் பணியாற்றியிருக்கிறார் என்றார்.