"ஜாங்கோ" படப்பிடிப்பு துவங்கியது
தமிழ் சினிமாவிற்கு புதிய அத்தியாயங்களாக இன்று விளங்கும் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக "ஜாங்கோ" எனும் புதிய படத்தை தயாரிக்கின்றார்.
ஜாங்கோ படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. "ஜாங்கோ" படத்தின் படப்பிடிப்பை பாரதிய ஜனதா கட்சி தமிழக இளைஞர் அணி தலைவரும், மஹாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரேவின் நெருங்கிய நண்பருமான திரு. சதிஷ் குமார் போன்ஸ்லே கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், முண்டாசுப்பட்டி படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய மனோ கார்த்திக்கேயன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
சதிஷ் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மிர்னாலினி கதாநாயகியாக நடிக்கின்றார். இவர்களுடன் கருணாகரன், ராம்தாஸ், RJ ரமேஷ், ஹரிஷ் பெராடி, துளிசி, சந்தான பாரதி, சிவாஜி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.