16.2 C
New York
Friday, October 11, 2024

Buy now

spot_img

Amala returns to Tamil cinema after 30years

30 வருடங்களுக்கு பிறகு,
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்
படத்தில் மீண்டும் அமலா.

தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, மாப்பிள்ளை, வெற்றி விழா, மவுனம் சம்மதம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். 1991-ல் கற்பூர முல்லை படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார். 30 வருடங்களுக்கு பிறகு தற்போது டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் #கணம் படத்தில் அமலா தமிழில் மீண்டும் நடிக்கிறார். இந்த படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவரும் கடைசியாக 2015-ல் வெளியான ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார். 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் #கணம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் ஷர்வானந்த் ஜோடியாக ரீதுவர்மா நடிக்கிறார். நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இந்த படத்தை ஸ்ரீகார்த்திக் இயக்குகிறார். தயாரிப்பு S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE