8.2 C
New York
Tuesday, March 25, 2025

Buy now

spot_img

Actor Sampathraj Directing Short film’ Pachonthi

  

சமுத்திரக்கனி இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் 2004 இல் வெளிவந்த நெறஞ்ச மனசு படத்தின் மூலம்  நடிகர் சம்பத் தனது சினிமா பயணத்தை தொடங்கினர். அதை தொடர்ந்து பருத்திவீரன் ,தாமிரபரணி,சென்னை 600028 ,சரோஜா,ஜில்லா போன்ற 80 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். .அதன் பிறகு சில வருடங்கள் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை ஏனென்றால் அந்த சமயம் அவர் பிற மொழி படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தார் .அதன் பிறகு இப்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் காலா திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து சக்க போடு போடு ராஜா மற்றும் வெங்கட் பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள R K நகர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
 
 
பல்வேறு படங்கள் மற்றும் வித்யாசமான வேடங்களில் நடித்துவந்த இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.நடிகர் சம்பத் தற்போது பச்சோந்தி என்ற குறும்படம்   ஒன்றை இயக்கியுள்ளார்.இந்த குறும்படம் சமூகத்தில் நடக்கும் ஆண் ஆதிக்கம் ப ற்றி கூறியுள்ளது.இந்த குறும்படத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால்  பெண்மை பேசும் ஆண் ஆதிக்கம்  என்றே கூறலாம் .பெண்களை காட்சிப்பொருளாகவும் காமத்துக்கு கைக்குழந்தையாகவும் நினைக்கும் ஆண்களை பற்றி மிக சுருக்கமாக தெரிவித்துள்ளார் இக்குறும்படத்தின் இயக்குனர் சம்பத் அவர்கள்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE