24.1 C
New York
Friday, September 20, 2024

Buy now

spot_img

Actor Karikalan producing 10 movies in tamil

                           நடிகர் கரிகாலன் தயாரிக்கும் பத்து படங்கள்

 

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான சோலையம்மா படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் கரிகாலன்...

அதற்கு பிறகு தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 70 படத்திற்கும் மேல் நடித்திருந்தார்...

அதில் ரமணா அரவான் அடிமைசங்கிலி நிலாவே வா கருப்பி ரோஜா தயா தேவன் படங்கள் குறிப்பிடத்தக்கவை.  இவர் இயக்கி நடித்த படம் "வைரவன் "

சில காலம் நடிப்பு இயக்கம் எதிலும் ஈடு படாமல் ஒதுங்கி இருந்தார்...ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து உச்சத்தை தொட்டார்.

தற்போது மீண்டும் கலைத்துறைலயில் கால் பதிக்கிறார்...

அரசியலில் நேர்மையானவர்..ஊழலற்றவர்...தன்னலம் பார்க்காமல் பொது நல நோக்கம் கொண்டவர் என்று புகழப்பட்டவர் காமராஜர். அவர் மீது அதிக பற்று கொண்டவர் கரிகாலன்.அதனால் காமராஜர் கனவுக் கூடம் என்கிற பெயரில் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

மது ஒரு மனிதனையும் அவன் குடும்பத்தையும் மட்டும் அல்ல..ஒரு நாட்டையே சின்னா பின்னமாக்கி விடுகிறது. அடிப்படை கல்வியாக போதிக்க வேண்டிய கல்வி ,ஒழுக்கம் ,தேசப்பற்று, பெரியவர்களுக்கு மரியாதை , உற்சாகமாக இருப்பது., உடற்கல்வி போன்றவையோடு பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை, பக்தி ஆகியவற்றை போதிக்க தவறி விட்டோம். அது மட்டுமல்லாமல் ஏழை எளியோருக்கு பள்ளிகள் ,குறைந்த கட்டணத்தில் சுகாதாரமான திரையரங்குகள்,திருமண மண்டபங்கள் என்று செயலாற்ற இருக்கிறோம்...

அதோடு இன்றைய தேவையான கம்ப்யூட்டர் கல்வியையும் போதிக்க உள்ளோம்...

இதையெல்லாம் அடிப்படை கல்வியாக போதித்து இருந்தால் நம் நாடு உலக மக்களிடையே முதல் நாடாக இருந்திருக்கும்...

இதையெல்லாம் நடை முறை படுற்ற வேண்டுமானால் என் கையில் உள்ள ஆயுதத்தால் செயலாக்க முடியும் என்று யோசித்தேன்...

அந்த ஆயுதம் ""சினிமா" அதனால் தான் சினிமா கம்பெனி ஆரம்பித்துள்ளேன்..

அதன் மூலம் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் ஆபாசம் இல்லாத குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் விதமாக் கலாச்சாரம் மீறாமல் நல்ல கதைகள் கொண்ட படமாக வருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க உள்ளோம்..

எங்களால் எல்லாரையும் திருத்த முடியாது., ஒரு சிலராவது மாறினால் நல்லது என்கிற எண்ணம் தான் எங்களுக்கு.

நான் கெட்டவனாக நடித்து நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...

அதனால் எனக்கு ஒரு ஆசை .,என்னை சுற்றி எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று. அதற்காக நிறைய முயற்சிகளை எடுக்கிறேன். என்றார் நடிகர் கரிகாலன்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE