5.2 C
New York
Thursday, December 12, 2024

Buy now

spot_img

1st Look of keerthy suresh in “Dasara” Released

நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான  “தசரா”  திரைப்படத்திலிருந்து, நடிகை கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில்  மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது “தசரா”. நானியின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி சமீபத்தில் வெளியான முதல் பாடல் ‘தூம் தாம்’ வரை ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, படத்தின் மீதான ஆர்வத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, வெண்ணிலாவாக நடிக்கும் அவரது கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண் தோற்றத்தில் கலக்கலாக இருக்கிறார். நட்சத்திரமாக ஜொலிக்கும் மஞ்சள் நிற புடவையில் அவர் தனது காலை அசைக்க, அதே நேரத்தில் டிரம்மர்கள் அவரது ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து வேகமாக அடிக்கிறார்கள். இந்த ஃபர்ஸ்ட் லுக் பார்த்தவுடன் பெரும் உற்சாகத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் நவீன் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

“தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 30 மார்ச் 2023 வெளியாகிறது.

நடிகர்கள் : நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய்குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் – ஸ்ரீகாந்த் ஒதெலா
தயாரிப்பு –  சுதாகர் செருக்குரி
தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீ லக்‌ஷ்மி  வெங்கடேஸ்வரா சினிமாஸ்
ஒளிப்பதிவு –  சத்யன் சூரியன் ISC
இசை – சந்தோஷ் நாராயணன்
எடிட்டர் – நவின் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர் – அவினாஷ் கொல்லா
நிர்வாகத் தயாரிப்பாளர் – விஜய் சாகந்தி
சண்டைப்பயிற்சி – அன்பறிவு
மக்கள் தொடர்பு –  சதீஷ்குமார் – சிவா (AIM) (தமிழ்) – வம்சி-சேகர் (தெலுங்கு)

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE