13.2 C
New York
Tuesday, October 8, 2024

Buy now

spot_img

SAREGAMA & NOISE and GRAINS இணைந்து வழங்கும் “என்ன வாழ்க்கடா” ஆல்பம் பாடல் வெளியீடு

SAREGAMA & NOISE and GRAINS இணைந்து வழங்கும் “என்ன வாழ்க்கடா” ஆல்பம் பாடல் வெளியீடு!

SAREGAMA & NOISE and GRAINS நிறுவனங்கள் இணைந்து, ரக்‌ஷன் சுனிதா, ஸ்வஷ்திஸ்டா மற்றும் GP முத்து ஆகியோர் நடிப்பில் “என்ன வாழ்க்கடா” ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது. இப்பாடலை டாங்க்லி இயக்கியுள்ளார். நேற்று 23.09.2021 மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் தங்கள் சமுக வலைத்தள பக்கம் மூலம் இப்பாடலை வெளியிட்டனர்.

தென்னிந்தியாவில் SAREGAMA Originals உடைய முதல் ஆல்பம் பாடலாக இப்பாடல் வெளியாகிறது. இப்பாடலின் அறிமுக விழா நேற்று பத்திரைக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைத்துறையை சார்ந்த முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர். அனைவர் முன்னிலையில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா இப்பாடலை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் SAREGAMA நிறுவனம் சார்பாக B R விஜயலக்‌ஷ்மி பேசியதாவது

SAREGAMA இந்தியாவின் பழமையான, மிகவும் பெருமைமிக்க நிறுவனம். இந்நிறுவனம் மூலம் தொடர்ந்து புதிய திறமைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். புதிதாக SAREGAMA Originals எனும் அமைப்பு மூலம், தற்போது புதிய இசை திறமைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். முன்பு ஒரு நிகழச்சிக்காக ஏ ஆர் ரஹ்மான் பள்ளியில் இருந்து இந்த குழுவை மும்பைக்கு அழைத்து போயிருந்தோம், அப்போது இவர்கள் செய்த கலாட்டா மறக்க முடியாதது. இப்போது கணேசன் முதலான அதே குழு, SAREGAMA Originals உடைய முதல் பாடலை செய்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சி. இப்பாடலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகை ஐஷ்வர்யா பேசியதாவது…

SAREGAMA விஜயலக்‌ஷ்மி இந்தியாவில் முதல் பெண் கேமராமேனாக இருந்தவர். அவரது இயக்கத்தில் நான் நடித்திருக்கிறேன் மிகுந்த திறமை வாய்ந்தவர். சுனிதா, ஸ்வஷ்திஸ்டா நன்றாக டான்ஸ் ஆடுவார்கள் என்று தெரியும், ஆனால் பாட்டை பார்த்த பிறகு தான் ரக்‌ஷனுக்கு இந்த அளவு ஆடத்தெரியும் என்பது தெரிந்தது. எல்லோரும் நன்றாக செய்துள்ளார்கள். பாடல் அற்புதமாக வந்துள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

பாடலாசிரியர் A.PA. ராஜா பேசியதாவது…

குட்டிப்பட்டாசு பாடலுக்கு பிறகு, நான் செய்யும் துள்ளலான இரண்டாவது பாடல் இது. இப்பாடலில் பெண் பித்தனாக நாயகனை சித்தரிக்கவில்லை, ஒரு ஜாலியான பாடலாகத்தான் இதை உருவாக்கியுள்ளோம் ஏதும் தவறாக எண்ண வேண்டாம். பாடலை பாருங்கள் பிடிக்கும். இந்த பாடலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

பாடகர் பென்னி தயாள் பேசியதாவது…

இண்டிபெண்டண்ட் ஆல்பங்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். எப்போதுமே இண்டிபெண்டட் ஆல்பங்கள் பாடல்கள் பாட அதிக முக்கியத்துவம் அளிப்பேன். கணேசன் முதலான குழுவினர் என்னை இப்பாடலுக்கு அணுகியதற்கு நன்றி. GPமுத்து அண்ணா உங்கள் காமெடி வீடியோ நிறைய பார்ப்பேன். என்னை பார்த்தால், நான் அப்படிபட்ட வீடியோக்கள் பார்ப்பது போல் தெரியாது ஆனால் காமெடி வீடியோக்கள் எல்லாமே பார்ப்பேன். SAREGAMA நிறுவனத்துடன் இந்தியில் நிறைய பாடல்கள் இணைந்து பணியாற்றியுள்ளேன். தமிழில் இணைந்து வேலை செய்தது மிகுந்த மகிழ்ச்சி.

இசையமைப்பாளர் S.கணேசன் பேசியதாவது…

எனக்கு வாய்ப்பு தந்த NOISE and GRAINS குழுவிற்கு நன்றி. டோங்கிலி என்னை தேர்ந்தெடுத்து, வாய்ப்பளித்ததற்கு நன்றி. இந்த ஆல்பம் பாடலை டால்பி டிஜிட்டலிலும் பண்ணியுள்ளோம் கேட்டுப்பாருங்கள், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் டாங்க்லி ஜம்போ பேசியதாவது…

இளைஞர்கள் தினசரி வாழ்வில் சந்திப்பதை தான் பாடலாக செய்தோம், புதிதாக எதுவும் செய்யவில்லை. இந்த பாடலை குழுவாக இணைந்து செய்துள்ளோம். இதில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. S.கணேசன் இசை அட்டகாசமாக இருந்தது. பென்னி தயால், விருஷா இப்பாடலை பாடியுள்ளனர். அபு மற்றும் சால்ஸ் நடன அமைப்பு செய்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார் எல்லோருக்கும் என் நன்றிகள்.

GP முத்து பேசியதாவது…

இந்த பாடலில் டான்ஸ் ஆடியது சந்தோஷமாக இருக்கிறது. காட்டில் கிடந்து லெட்டர் படித்தவனை டான்ஸ் ஆட வைத்த SAREGAMA வுக்கு நன்றி. டிக்டாக் போனபோது நிறைய வருத்தப்பட்டேன். ஆனால் மக்கள் எனக்கு நல்ல வாய்ப்பு அளித்துள்ளார்கள். இந்த பாடலுக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. இப்பாடலை பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்

நடிகை ஸ்வஷ்திஸ்டா பேசியதாவது..

இந்த பாடல் முதலில் கேட்ட போதே மிகவும் பிடித்திருந்தது. பாடலின் தாளம் இசை எல்லாமே பிடித்திருந்தது. ரக்‌ஷனை இந்த செட்டில் தான் முதன் முதலில் பார்த்தேன். செட்டையே கலகலப்பாக வைத்திருந்தார். சுனிதா ரக்‌ஷன் “குக் வித் கோமாளியில்” அனைவருக்கும் தெரிந்த ஜோடி, இப்பாடலிலும் கலக்கியுள்ளனர். இந்த பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் குழுவினருக்கு நன்றி.

நடிகை சுனிதா பேசியதாவது…

SAREGAMA இந்தியில் பிரபலமான நிறுவனம், தமிழில் அவர்கள் அறிமுகமாகும் பாடலில் நான் பங்கேற்றது மகிழ்ச்சி. முக்கியமாக டாங்கிலிக்கு நன்றி. ரக்‌ஷனுக்கு நன்றி அவனால் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் பாருங்கள் நன்றி.

நடிகர் ரக்‌ஷன் பேசியதாவது….

SAREGAMA குழுவிற்கு முதலில் என் நன்றி. டோங்க்லி அண்ணாவுக்கு நன்றி. அவர் தான் என்னை அழைத்து இந்த வாய்ப்பை தந்தார். இந்தப்பாடலில் வேலை செய்ததது, மிக சந்தோஷமான அனுபவமக இருந்தது. சுனிதா உடன் ஆட, நிறைய பயந்தேன் ஆறு நாள் நான் பயிற்சி எடுத்து ஆடியதை, ஒரே நாளில் அவர் ஆடிவிட்டார். கணேசன் மிக சிறப்பான இசையை தந்தார். அபு மற்றும் சால்ஸ் தான் இந்த நடனத்தை மிக அழகாக அமைத்தனர். GP முத்து அண்ணாவுடன் வேலை செயத்தது சந்தோஷம். உங்கள் அனைவருக்கும் பாடல் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி

செஃப் தாமு பேசியதாவது….

ரக்‌ஷன் என் பிள்ளை மாதிரி, எனக்கு மிகவும் தெரிந்த குழுவினர் இணைந்து இப்பாடலில் பணியாற்றியுள்ளார்கள். இந்த பாடல் 100 மில்லியன் பார்வைகளை பெற வாழ்த்துக்கள் முக்கியமாக டாங்க்லிக்கு எனது வாழ்த்துக்கள்.

பவித்ரா லக்‌ஷ்மி பேசியதாவது…

மியூசிக்கில் SAREGAMA எப்போதும் முதன்மையாக இருக்கும் நிறுவனம், அப்படி ஒரு ப்ராண்டில் இந்த பாடல் வந்துள்ளது மகிழ்ச்சி. ரக்‌ஷன் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்கு பிறகு இரண்டு கதாநாயகிகளுடன் தனி ஹீரோவாக நடித்திருக்கிறார், அவருக்கு எனது வாழ்த்துக்கள். சுனிதா டான்ஸ் பற்றி அனைவருக்கும் தெரியும். பென்னி தயாள் குரல் அனைவருக்கும் பிடிக்கும். இப்பாடலில் பங்காற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

நடிகர் அஷ்வின் பேசியதாவது…

ரக்‌ஷன் இப்பாடல் செய்தது எனக்கு சந்தோஷம் ரக்‌ஷனிடம் நிறைய முறை ஆல்பம் பாடல் செய்ய சொல்லியிருக்கிறேன். இப்போது இந்த பாடல் வெளிவந்திருப்பது மகிழ்ச்சி. NOISE and GRAINS உடன் நான் ஏற்கனவே பணிபுரிந்திருக்கிறேன். கணேசன் அவர்களின் இசை நன்றாக இருக்கிறது. இண்டிபெண்ட்ண்ட் ஆல்பங்கள் நிறைய வர வேண்டும் அதன் மூலம் நிறைய புதிய திறமையாளர்கள் வருவார்கள். இனி நாங்களும் நிறைய பாடல்கள் செய்வோம் நன்றி.

நடிகர் கவின் பேசியதாவது….

டாங்க்லி, கார்த்தி இருவரும் மிகத்திறமையாளர்கள். தனி ஆல்பமுக்கு இருக்கும் மார்க்கெட்டை புரிந்து சிறப்பாக வேலை செய்துள்ளார்கள். ஒரு பாடலுக்கு வெளியீட்டு விழா எனும்போதே பிரமாண்டமாக இருந்தது. ரக்‌ஷன் நாயகன் என்றபோது இந்த விழா கண்டிப்பாக தேவைதான் எனத்தோன்றியது. ரக்‌ஷனுக்கு வாழ்த்துக்கள் . GP முத்து அண்ணனை வைத்து ஒரு முழு ஆல்பம் வர வேண்டும் டாங்க்லி இதை கண்டிப்பாக செய்யுங்கள். நாங்கள் அனைவரும் அதில் கேமியோ செய்கிறோம், என்னை இங்கு அழைத்த அனைவருக்கும் நன்றி.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகர் ரியோ ராஜ் பேசியதாவது…

ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது இதில் வேலை செய்த அனைவரையுமே எனக்கு நன்கு தெரியும். NOISE and GRAINS எந்த வேலையையும் மிகச்சிறப்பாக செய்வார்கள் இந்த பாடலையும் கண்டிப்பாக வெற்றி அடையச் செய்வார்கள். SAREGAMA தென்னிந்தியாவுக்கு வருவது மகிழ்ச்சி. இண்டிபெண்டண்ட் ஆல்பங்கள் நிறைய வர வேண்டும். நிறைய திறமையாளர்கள் வரவேண்டும். GP முத்து அண்ணண் இப்பாடலில் நடித்துள்ளது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசியதாவது

SAREGAMA நிறுவனம் இந்தியாவில் முன்னணியில் உள்ள இசை நிறுவனம். அவர்கள் இப்போது தென்னிந்தியாவில் கால் பதித்து, புதிய படைப்புகளை தருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது தனியான பாடல் ஆல்பங்கள் தான் நிறைய ஹிட்டாகி வருகிறது. நிறைய இளம் திறமையாளர்கள் அதன் மூலம் அறிமுகமாகி வருகிறார்கள். இளைஞர்கள் மத்தியில் இப்பாடல்கள் பெருமளவில் வரவேற்பை குவிக்கின்றன. இந்த பாடலை மிக அழகாக உருவாக்கியுள்ளார்கள் மாடர்னான பாடலில், அனைத்து ரசிகர்களையும் கவர, GP முத்துவை ஆட வைத்ததை பார்க்க, நன்றாக இருந்தது. இது ஒரு நல்ல முயற்சி இன்னும் பல ஆல்பங்கள் இது போல் வர வேண்டும். இப்பாடல் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

S.கணேசன் இசையமைத்துள்ள இப்பாடலை, A.PA. ராஜா எழுதியுள்ளார். பென்னி தயாள், விருஷா இப்பாடலை பாடியுள்ளனர். அபு மற்றும் சால்ஸ் நடன அமைப்பு செய்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE