Home Tags Posts tagged with "sivakarthikeyan"

0 66
VAAYADI PETHA PULLA FROM KANAA STREAKS WITH 50 MILLION LOVE NOW 
 
There are certain creations in world of art that gets beyond critical analysis and instantly and become the personal cheery picks. Especially, it remains so much in adherence with rare songs that encompasses relationships, bonding, emotions and joy. In an absolute manner, “Vaayadi Petha Pulla” from Kanaa featuring Sathyaraj , Aishwarya Rajesh, and Darshan in lead roles has become an appealing illustration by striking up with 50 Million views in YouTube. 
 
“Sometimes, it happens that certain joy comes in uncalled for manner and we are left speechless. Such happens to be our situation now where the abundant love of music lovers and listeners has been showered upon Vaayadi Petha Pulla. I would say, it’s a complete team effort and I thank Music director Dhibu Ninan Thomas and lyricist GKB for creating an exquisitely beautiful song that nurtures the father-daughter joviality and joy together. Moreover, I thank Dhibu for creating a good memory along with my daughter Aaradhana, which I can cherish lifetime. I am happy that the song has found 50 Million love now and has become a favourite for many. I earnestly thank Vaikom Vijayalakshmi madam for her graceful rendition. The sweetness of the song is enlivened through the cute voice of Aradhana. Beyond all, I am thankful to my friend and filmmaker Arunraja Kamaraj for creating a good memory that I can carry across years. He was the first one to come up with idea of bringing me and daughter Aaradhana together for this track. ” says Sivakarthikeyan, who is producing this film for Sivakarthikeyan Productions. 
 
He furthermore adds that the post-production work is happening on full swing and the theatrical trailer will be released shortly.

0 207
STUDIO GREEN FILMS K.E. GNANAVEL RAJA ‘PRODUCTION NO.9’
‘SIVAKARTHIKEYAN 13 #SK13’ DIRECTED BY RAJESH LAUNCHED WITH A RITUAL POOJA
 
When an audience walking out of theatres utter, “It was a wholesome entertainer’ and take back home baggage of fun and enjoyment, what else could be a priceless joy for the creators crafted and presented it. Across the span of a decade, producer K.E. Gnanavel Raja of Studio Green, Filmmaker Rajesh and Actor Sivakarthikeyan have offered wholesome entertainers in their respective arenas. Now, it all becomes a triple impact as these powerhouse entertainers will be coming together.
 
Studio Green’ ‘Production No.9’ tentatively titled as ‘Sivakarthikeyan 13 #SK13’ was launched this morning with a ritual pooja.  
 
Sharing some words on the project, producer K.E. Gnanavel Raja says, “When personalities like Rajesh and Sivakarthikeyan are coming together, one needn’t strain to analyse what genre, the film would belong to. Moreover, for a filmmaker like Rajesh, who is much illustrious for portraying his protagonists in accordance to the expectations of fans and family audiences, I am hopeful and confident that he will definitely cater to their tastes of what they expect from a Sivakarthikeyan film. Of course, Sivakarthikeyan hasn’t been merely an entertainer of masses, but has focalized on the part that his producers, distributors and exhibitors are benefitted well. So it’s so much elating to team up with such positive people and audiences can look forward to an enjoyable family entertainer.” 
 
The official announcement about the cast and crew in this film will be made shortly.
 
ராஜேஷ் இயக்கத்தில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா ப்ரொடக்‌ஷன் நம்பர் 9, சிவகார்த்திகேயன்13 படம் பூஜையுடன் துவங்கியது! 
 
திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், “இது முழுக்க முழுக்க ஒரு  எண்டர்டெயினர் படம்” என்று சொல்லி விட்டு, மகிழ்ச்சியோடும், கொண்டாட்டத்தோடும் வீட்டுக்கு போகும்போது அப்படி ஒரு படத்தை எடுத்து, அவர்களுக்கு வழங்கிய படக்குழுவுக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும். இதுநாள் வரையில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா, இயக்குனர் ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வழங்கியவர்கள். தற்போது இந்த மூன்று பேரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போவது உறுதி. 
 
ஸ்டுடியோக்ரீன் ப்ரொடக்‌ஷன் நம்பர் 9 தற்போதைக்கு, சிவகார்த்திகேயன் 13 #SK13 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் சம்பிரதாய பூஜையுடன் இன்று துவங்கியது. 
 
இந்த படத்தை பற்றி தயாரிப்பாளர் கேஈ ஞானவேல்ராஜா கூறும்போது, “ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஆளுமைகள் ஒரு படத்தில் இணையும்போது, அந்த படம் என்ன மாதிரி படமாக இருக்கும் என ஆராய வேண்டியதில்லை. மேலும் ராஜேஷ் படங்களின் கதாநாயகர்களின் கதாபாத்திர சித்தரிப்பு, ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் எப்போதும் அமையும். எனவே சிவகார்த்திகேயன் படத்தில் ரசிகர்கள் என்ன ரசிப்பார்களோ அதை நிச்சயம் ராஜேஷ் இந்த படத்தில் கொடுப்பார் என நம்புகிறேன். மேலும் சிவகார்த்திகேயன் பொழுதுபோக்கு படங்களை கொடுக்கும் ஒரு நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரும் பயனடைய வேண்டும் என்று நினைப்பவர். எனவே இந்த மாதிரி நேர்மறையான எண்ணங்களை உடைய மனிதர்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன், ரசிகர்கள் ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கலாம். மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

0 224

Sivakarthikeyan, the man of simplicity visits the sets of ODAVUM MUDIYADHU OLIYAVUM MUDIYADHU
If encouraging young talents is an art then we can simply say that Sivakarthikeyan is a Picasso in it. The stardom actor, who is a close friend of promising Producer and actor V Sathyamurthi has recently visited the sets of ODAVUM MUDIYADHU OLIYAVUM MUDIYADHU in the outskirts of chennai.
Produced by V Sathyamurthi under the banner Clapboard Production, the horror- comedy flick OMOM directed by debutante Ramesh Venkat of Eruma Saani fame has went on floors recently. The entire cast and crew of the film are not more than 21 in age and they are simply known as team 21, which adds more strength to OMOM. While Joshua J Perez handles the camera, the BGMs and Songs are composed by Kaushik Krish.
“The humbleness of Sivakarthikeyan sir cannot be expressed in words. We, the team of ODAVUM MUDIYADHU OLIYAVUM MUDIYADHU express our heartfelt thanks to him for encouraging the young talents who were struggling hard to imprint their names in Tamil film industry….” says Producer and Actor V Sathyamurthi in a positive tone.

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படக்குழுவினரை ஊக்குவிக்க

ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்

சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் கலைஞர்களை ஊக்குவித்து வருவது, நம் தமிழ் நட்சத்திர கலைஞர்களின் தனி சிறப்பு. இதற்கு உதாரணமாக, சமீபத்தில் சென்னையில் துவங்கி நடைபெற்று வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் படபிடிப்பிற்கு வருகை தந்து, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். ‘கிளாப்போர்டு’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வி சத்யமூர்த்தி தயாரித்து வரும் இரண்டாவது திரைப்படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. நடிகர் – தயாரிப்பாளர் வி சத்யமூர்த்தி அவர்களின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, ஊக்குவித்தது மட்டுமின்றி, படத்தின் இயக்குநர் உட்பட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் 21 வயதிற்குள் இருப்பதை அறிந்து ஆச்சர்யமுற்றார்.
வி.சத்யமூர்த்தி தயாரித்து நடித்து வரும் இந்த ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தை, ‘எரும சாணி’ புகழ் ரமேஷ் வெங்கட் (அறிமுகம்) இயக்கி வருகிறார். ஒளிப்பதிவாளராக ஜோஷுவா ஜெ பெரேஸ் (அறிமுகம்) மற்றும் இசையமைப்பாளராக கௌஷிக் கிரிஷ் (அறிமுகம்) பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
“சிவகார்த்திகேயன் சாரின் எளிமை குணத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. சினிமாவில் சாதிக்க துடிக்கும் பல இளம் கலைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கும் அவரிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்று இருப்பது எங்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி. எங்கள் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, அனைவரையும் ஊக்குவித்து சென்ற சிவகார்த்திகேயன் சாருக்கு, எங்களின் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படக்குழுவினரின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்த கொள்கிறோம்” என்று கூறுகிறார் தயாரிப்பாளரும், நடிகருமான வி.சத்யமூர்த்தி.

0 285

நடிகர் சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நடித்த கூட்டத்தில் ஒருத்தன்  “மாற்றம் ஒன்றே மாறாதது“ Gift Song ப்ரோமோ சாங் வருகிற ஜூன் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் , ரமானியம் டாக்கீஸ் தயாரிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் “ கூட்டத்தில் ஒருத்தன் “. அசோக் செல்வன் , ப்ரியா ஆனந்த நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை தா.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இது வரை தமிழ் சினிமாவில் முதல் பெஞ்ச் மாணவர்கள் , கடைசி பெஞ்ச் மாணவர்கள் பற்றி நிறைய படங்கள் வந்துள்ளது. இப்படம் கொஞ்சம் வித்யாசமாக மிடில் பெஞ்ச் மாணவர்களைப் பற்றி பேசும் படமாக இருக்கும். இந்த உலகத்தில் பெரும்பான்மையானவர்கள் மிடில் பெஞ்சர்ஸ் தான். அவர்களை கொண்டாடும் படமாக கூட்டத்தில் ஒருத்தன் இருக்கும். இப்படத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையில் அனைத்து பாடல்களும் ஆல்பம் ஹிட்டாக வெற்றி பெற்றுள்ளது.   “ மாற்றம் ஒன்றே மாறாதது “Gift Song ஒவ்வொரு பூக்களுமே பாடலைப் போல மோட்டிவேஷனல் பாடலாக இருக்கும்.கவிஞர் கபிலன் பாடல் வரிகளில் அனைத்து பாடல்களும் மிகச்சிறப்பாக வந்துள்ளது.  இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் அனைத்தும் அனைவரையும் ஊக்குவிக்கும் வரிகளாக அமைந்துள்ளது இந்த சிறப்பாகும்.இப்பாடலில் வரும் வரியான “ உன் கேள்விக்கு விடை நீயடா , மண்பானையாய் உடையாதடா “ ,தோல்வியெல்லாம் தோல்வியல்ல , வெற்றி  என்றும் தூரமல்ல போன்ற வரிகள் அனைவருக்கும் பாஸிட்டிவான ஒரு விஷயத்தை கொடுக்கக்கூடிய வரிகளாக இருக்கும்.இப்பாடலை படமாக்கும் போதே எல்லோரும் இப்பாடல் அருமையாக உள்ளது என்று பாராட்டினார்கள். அப்போது நாங்கள் யோசித்த விஷயம் தான் இந்த Gift Song . படத்துக்குள்ளே மட்டும் இந்த பாடலை வைக்காமல் , இதை ஒரு ப்ரோமோ பாடலாக மாற்றலாம் என்று முடிவு செய்தோம். “ கொலைவெறி டி “ பாடல் எப்படி ஒரு சூப் சாங்காக இருந்ததோ அதே போல் இது Gift Song என்று எல்லோராலும் கொண்டாடப்படும் பாடலாக இருக்கும். இப்பாடலை நாங்கள் உருவாக்கிய நேரத்தில் தான் தமிழகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்ற இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரையும் சந்தித்து அவர்களுக்குமாற்றத்தை பற்றி சொல்லகூடிய அழகான கிப்ட் ஒன்றை வழங்கினோம். அந்த பாடலை வருகிற ஜூன் 2௦ விஷுவலாக வெளியிடுகிறோம். இந்த பாடலில் இடம்பெற்றுள்ள விஷுவல்ஸ் படத்தில் இடம்பெறாது. படத்துக்கென்ற தனியாக நாங்கள் விஷுவல்சை எடுத்துள்ளோம்.இப்பாடலில் அகரம் அறக்கட்டளையின் நிறுவனர் , நடிகர் சூர்யா , ஆர்யா , சிவகார்த்திகேயன் , நாசர் , பிரகாஷ் ராஜ் , சிவகுமார் , விஷ்ணு விஷால் , சமுத்திரகனி , ஆர்.ஜே. பாலாஜி , அசோக் செல்வன் , ப்ரியா ஆனந்த் , நிவாஸ் கே பிரசன்னா , செப் தாமு , ரம்யா நம்பீசன் , வி,ஐடி கல்லூரி மாணவர்கள்  போன்ற பலர் இப்பாடலில் இடம்பெற்றுள்ளனர். இப்பாடல் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்றார் இயக்குநர் த.செ. ஞானவேல்.