9.8 C
New York
Saturday, April 27, 2024

Buy now

Chiranjeevi in “Syeraa Narasimha Reddy”

சிரஞ்சீவி பேசியது…

நடிகனாக நான் பிறந்த சென்னைக்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. R B சௌத்திரி படத்தை வாங்கியதற்கு அவருக்கு மிகப்பெரிய நன்றி. “சைரா நரசிம்மா ரெட்டி” எனது நெடு நாள் கனவு. பல காலமாகவே பட்ஜெட் பெரிதாக இருந்ததால் உருவாக்க முடியாத கனவாக இருந்தது. நான் சிறு இடைவேளைக்கு பின்  சினிமா வந்த பிறகு தமிழில் வந்த  “கத்தி”  படத்தை ரீமேக் செய்து நடித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏன் இப்போது சைரா செய்யக் கூடாது என நினைத்தேன் பாகுபலியின் வெற்றி நிறைய நம்பிக்கை தந்தது. ஏன் இந்தப்படத்தை நாம தயாரிக்கக் கூடாது என ராம்சரணைக் கேட்டேன் அவர் அவருடைய இரண்டாவது படத்திலேயே வரலாற்று கதை காஸ்ட்யூம் போட்டு நடித்து விட்டார். நான் 150 படம் நடித்தும் வரலாற்று கதையில் நடிக்கவில்லை. இந்தப்படம் அந்தக் கனவை நனவாக்கி தந்துள்ளது. தமிழில் கேட்டுக்கொண்டவுடனே கமல் குரல் தந்துள்ளார் அரவிவிந்த் சாமி டப்பிங் பேசியுள்ளார் இருவரின் அன்பிற்கும் நன்றி. இது ஒரு மொழிக்கான படமில்லை. வரலாற்றில் மறக்கப்பட்ட வீரனின் கதை அனைத்து  மொழிக்குமான படம், இந்தியப்படம். இப்படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவும், ஆசிர்வாதமும் படத்திற்கு வேண்டும். வாழ்த்துங்கள் என்றார்.

தயாரிப்பாளர் ராம்சரண் பேசியது….

எல்லாருடைய அன்புக்கும் நன்றி.
இந்தப்படத்தை நம்பி தமிழில் வாங்கியதற்கு R B சௌத்திரி  சாருக்கு நன்றி. படத்தில் பணிபுரிந்து அனைவருக்கும் நன்றி. நான் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன். 96 படம் பார்த்து அழுதிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அவர் இந்தப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டது சந்தோஷம். நயன்தாரா தமிழ் சூப்பர்ஸ்டார் அவர் இந்தப்படத்தில் நடித்ததும் சந்தோஷம். தமன்னாவும் நானும் நடித்த படத்திற்கு அப்பா வந்திருந்தார். நான் மீண்டும் சினிமாவுக்கு வந்தால் தமன்னாவுடன் நடிப்பேன் என்றார். விளையாட்டுக்கு சொன்னார் என்று நினைத்தேன். சினிமாவின் மேஜிக் அதுதான் இப்போது அது நடந்திருக்கிறது. நான் அப்பாவுக்கு கொடுத்த கிஃப்ட் என்கிறார்கள் ஆனால் இது அவர் எனக்கு கொடுத்த கிஃப்ட். 10 வருடங்களுக்கு முன்பே இந்தக்கதையை கேட்டார் அப்போதிலிருந்து உருவான படம் இது. கமல் சார் இப்படத்தில் மூன்று நிமிடம் குரல் தந்துள்ளார் அவருக்கு என் நன்றி. 10 நாட்கள் முன் அரவிந்த்சாமி சார் வீட்டுக்கு வந்திருந்தார் ‘இவ்வளவு பெரிய  படம் எடுக்கிற என்னயெல்லாம் கூப்பிடல’ எனக்கேட்டு அவரே அப்பாவுக்கு டப்பிங் பேசுகிறேன் என்றார். கொஞ்சம் கூட ஈகோ இல்லாத அவரது மனதிற்கு, அன்பிற்கு நன்றி இந்த வாரம் படம் வருகிறது. எல்லோருக்கும் பிடிக்கும் பாருங்கள், கொண்டாடுங்கள் என்றார்.

R B சௌத்திரி  பேசியது….

மிகப்பெரிய பட்ஜெட் படத்தை பிரமாண்ட செட் போட்டு எடுப்பார்கள் ஆனால் இப்படத்தில் இந்தியாவின் பிரமாண்ட நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளார்கள். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், கன்னட ராணா தமிழக முன்னணி நாயகன் விஜய்சேதுபதி,  நயன்தாரா எனப்பலர் நடித்த இந்தப் படத்தை கடந்த வாரம் பார்த்தேன். தமிழில் நான் தான் ரிலீஸ் செய்வேன் என அடம்பிடித்து வாங்கியுள்ளேன். தெலுங்கில் போல தமிழிலும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழில் பெரும் வெற்றி பெறும் என நம்புகிறேன் என்றார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE