5.5 C
New York
Friday, April 26, 2024

Buy now

Chennai 2 Singapore

சென்னை டு சிங்கப்பூர் திரைப்படம் ஒரு இனிய அனுபவம் நாம் உண்மையில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் போவது போல ஒரு அனுபவம் தான் இந்த படம். படம் மிக சிறந்த ஒரு நகைசுவை படம் முதல் காட்சியில் இருந்து ஒரு வித்தியாசான அனுபவம் என்றும் சொல்லணும் அந்த அளவுக்கு ஒரு நல்ல படம் நாம் கொடுக்கும் காசுக்கு நிச்சயம் நீங்கள் சந்தோஷமாக இரண்டு மணிநேரம் நேரத்தை செலவு செய்யலாம்.
இந்த படத்தை பொறுத்தவரை தயாரிப்பாளர் (இசையைப்பாளர்) ஜிப்ரான் தவிர அனைவரும் புதஊக தான் ஆனால் சிறந்த முகங்கள் என்று தான் சொல்லணும் ஒருத்ததுக்கும் ஒருத்தர் குறை இல்லை சிலர் சிங்கப்பூர் நடிகர்கள் அவர்களும் நகைசுவையில் கலக்கியுள்ளனர்.
நம்பிக்கையும் தன் நம்பிக்கைதான் வாழ்கை என்ற ஒன் லைன் வைத்து இரண்டு மணி நேரம் கதை சொல்லும் இயக்குனருக்கு உண்மையில் தன் நம்பிக்கை காப்பாத்தி இருக்கு

இயக்குனரின் சொந்த அனுபவம் தான் இந்த படம் என்ன ஒரு வித்தியாசம் என்றால் அவர் மலேசியாவில் இருந்து சென்னை வந்தார் இவர் கதை சென்னையில் இருந்து சிங்கப்பூர் போகிறார். உதவி இயக்குனர் வாய்ப்பு இல்லை ஆமா முதல் அனைவரும் வெறுக்கின்றனர் இதனால் மனம் உடைந்த ஹீரோ எப்போதும் போல தன் நம்பிக்கை கொடுத்து பணத்தையும் கொடுத்து சிங்கப்பூர் அனுப்புகிறார் எதற்கு தயாரிப்பாலரை பார்க்க இவர் போகும் இடத்தில தயாரிப்பாளர் ஒரு விபத்தில் கோமாவுக்கு போகிறார் அந்த நேரம் பாஸ்போர்ட் காணமல் போகுது பசி ரோட்டில் படுத்து தூங்குகிறார்
காலையில் விழிக்கும்போது ஒரு படபிடிப்பு அங்கு நடக்குது அங்கு உள்ள காமிரா மேன் அவரிடம் தன் கதையை சொல்ல சரி வா நான் உனக்கு உதவுகிறேன் என்று நகைசுவை பயணம் ஆரம்பம் முன் அறியாத இந்த காமெரா மேன் ஒரு பணக்கரை சந்திக்க வைத்து கதை சொல்லுகிறார் அந்த அந்த பணக்காரர் காதலிக்கு பிடிக்கவில்லை காதல் படம் தான் எடுக்கணும் என்று சொல்ல உடனே அங்கு இருந்து வெளியில் வருகின்றனர் ஹீரோ லவ் என்றால் என்ன என்றுகூட எனக்கு தெரியாது நான் எப்படி காதல் படம் என்னால் முடியாது என்று சொல்லகிறார் இதனால் கோவம் அடைந்த நண்பர் அவருக்கு புத்திமதி சொல்ல உன் பாஸ்போர்ட் கிடைக்க கிட்டத்தட்ட ஆறுமாதம் ஆகும் அதுவரை சும்மா இல்லாமல் ஒரு காதல் கதை முயற்சி செய் என்று சொல்லும் பொது தான் நாயகி என்ட்ரி
பாஸ்போர்ட் ஆபிஸ் வாசலில் ஒரு பெண் அழுகிறாள் ஹீரோவும் அழுகிறார் இருவருக்குள் ஒரு இது எது என்று எல்லாம் கேக்ககூடாது படத்தில் பாருங்கஉடனே ஹீரோ காதல் கதை ஸ்கிரிப்ட் ரெடி என்று சொல்லும் நேரத்தில் நாயகிக்கு ஒரு கொடிய நோய் இதை மீறி படம் இயக்கினாரா வெற்றிபெற்றா காதலியை காபற்றினரா என்பது தான் மீதிகதை அதை மிகவும் கலப்பாக கூறியுள்ளார் அதுவும் கடைசி அரை மணி நேரம் சிரித்து சிரித்து வயறு வலிக்கும் அளவுக்கு நகைசுவை என்று தான் சொல்லணும்
ஹீரோவாக வரும் கோகுல் ஆனந்த் முதல் படம் மிக அற்புதமாக நடித்துள்ளார் தனக்கு கொடுத்த பங்கை இகவும் உணர்ந்து இயக்குனருக்கு சப்போர்ட் பண்ணியுள்ளார் என்று தான் சொல்லணும் நிச்சயம் தமிழ் சினிமா இவருக்கு வரவேற்ப்பு கொடுக்கும்

நாயகி முதல் படம் அஞ்சு கொரியன் அழகு அதற்கு ஏற்ப திறமை முதல் படத்திலே ஒரு சிறந்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் நிச்சயம் திழ் சினிமாவுக்கு ஒரு நல்ல அழகான மேலும் ஒரு மலையாள நடிகை கிடைத்துள்ளார் இயக்குனர்கள் உடனே பேசி புக் செய்யுங்கள் காரணம் நிச்சயம் ஒரு பெர்ய ரவுண்டு வருவார்
படத்தின் மிக பெரிய பலம் ராஜேஷ் பாலச்சந்திரன் இவர் தான் நண்பர் பாத்திரத்தில் வருகிறார் படமே இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு மிக சிறப்பாக செய்துள்ளார் தமிழுக்கு ஒரு மிக சிறந்த நகைசுவை நடிகர் கிடிதுள்ளர் என்று தான் சொல்லணும் காரணம் அந்த அளவுக்கு ஒரு நடிப்பு டைமிங் நடிப்பு என்றால் அது இவர் தான்
படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் முதல் படமே ஒரு வித்தியாசமான பாண்டஸி காமெடி படம் போல கொடுத்து தயாரிப்பாளரை நிச்சயம் காப்பாற்றுவார் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு சிறப்பாக செய்துள்ளார் என்று தான் சொல்லணும் அருமையான காமெடி அதில் தான் வெற்றி அருமையான நட்சத்திர தேர்வு அடுத்த வெற்றி நல்ல திரைகதை இப்படி எல்லாம் மிக சிறப்பாக செய்துள்ளார் குறும் படமா ஆரம்பித்து அதை இரண்டு மணி நேர படமாக செய்து அதை வெற்றியும் பெற்றுவிட்டார் இயக்குனர் சபாஸ்
இசை மற்றும் தயாரிப்பு ஜிப்ரான் பாடல்கள் மிக அருமை தன் சொந்த படம் என்பதால் எல்லா பாடல்களும் மிக சிறப்பாக கொடுத்துள்ளார் அதே போல பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அருமை இசையும் ஓகே தயாரிப்பும் ஓகே ஆக ஜிப்ரான் இரண்டிலும் பாஸ்
படத்தின் மிக பெரிய பலம் ஒளிப்பதிவு இயக்குனர் என்னத்துக்கு ஏற்ப காட்சிகளை கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து தமிழுக்கு கிடைத்த மிக சிறந்த ஒளிப்பதிவாளர்கள் பட்டியலில் நிச்சயம் இடம் பிடிப்பார் ஹாலிவுட் படம் போல காட்சியமைப்புகள் மிக சிறப்பு

Previous article
Next article

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE