Home Gallery Third Eye Exclusive

சென்னையில் முதல் முறையாக உலக தரத்தில் மிக அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது. உலகின் பல இடங்களில் 64க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்தியவர் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக முக்கியமானது.

ஓவியராக இருந்தாலும் நவீன கேமராக்கள் தொடங்கி அரியவகை கேமராக்களை சேகரிப்பது இவரது வழக்கம் இப்படி இவரிடம் உள்ள கேமராக்களின் எண்ணிக்கை மட்டும் 4000 ஆயிரத்தை தாண்டும்.

தனது கலை பொக்கிஷமான அரியவகை கேமராக்களை பொதுமக்களும்,கேமரா ஆர்வலர்களும் கண்டு ரசிப்பதற்காகவும், கேமரா வரலாறுகளை தெரிந்து கொள்வதற்காகவும் சென்னையில் ஒரு நிரந்தர அருங்காட்சியகம் அமைக்கும் பணியை செய்து வருகிறார்.

சென்னையில் மிக பிரபலமான விஜிபி ஸ்னோ கிங்டம் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்தில் உலகின் அதி நீளமான மம்மோத் கேமரா முதல் 11கிராம் எடையளவே கொண்ட மிகச்சிறிய கேமராக்களும், முதல் 3டி கேமரா, பிஸ்டல் கேமரா, வாக்கிங் ஸ்டிக் கேமரா என பல அரியவகை ஆயிரக்கணக்கான கேமராக்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற உள்ளது.

இது தவிர அரியவகை புகைப்படங்கள், புகைப்பட கலை தொடர்பான சுவாரசிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் இருக்கும்.

புகைப்பட கலையை அதன் வரலாற்றை தெரிந்துக் கொள்ளும் விதமாக 3ஆவண படங்களும் திரையிடப்பட உள்ளது. புறா உடலில் கேமராவை பொருத்தி உலகப்போரின் போது பயன் படுத்தியது பற்றியும், சர்வதேச அளவில் துப்பறிவாளர்களால் பயன்படுத்தப்பட்ட மினாக்ஸ் கேமரா பற்றிய படமும், கேமராக்கள் பற்றிய வரலாறு பேசும் படமும் பார்வையாளர்களுக்கு தினமும் திரையிடப்பட உள்ளது.

மேலும் இந்த அருங்காட்சியகத்தின் முகப்பே ஒரு கேமராவின் தோற்றம் போலவும், நுழைவு வாயில் கேமராவின் லென்ஸ் போலவும் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்று.

அதோடு இந்த அருங்காட்சியகத்தில் இன்னொரு சிறப்பம்சம் கிளிக் ஆர்ட் முறையில் புகைப்பட கலையின் முன்னோடியும் புகைப்படகலையின் பல சாதனங்களை கண்டுபிடித்தவர்களான பிரான்சு நாட்டைச்சேர்ந்த லூமியர் சகோதரர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்காவை சேர்ந்த பிரபல புகைப்பட கலையின் முன்னோடியும் புகழ் பெற்ற கோடாக் நிறுவனத்தின் நிறுவனருமான ஜார்ஜ் ஈஸ்ட்மேனிடம் அவர் கண்டுபிடித்த பாக்ஸ் கேமராவை பெற்றுக்கொள்வது போலவும் செல்பி எடுத்து கொள்ளலாம்.

19ம் நூற்றாண்டு தொடங்கி 21ம் நூற்றாண்டு வரையிலான புகைப்பட கலையின் நீண்ட வரலாறை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருப்பது ஆசிய அளவில் வேறு எங்கும் பார்க்க முடியாது என்பது இதன் சிறப்பம்சம்.

உலக புகைப்பட தினத்தில் இந்த அருங்காட்சியகத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் திறந்து வைக்கிறார். கேமரா வரலாறுகள் குறித்த ஆவண குறும்படங்களை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். இந்த கேமரா அருங்காட்சியகம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்று நட்பை பற்றி ஆழமாக பேசும் நாடோடிகள் , ஈட்டி எனும்ஸ்போர்ட்ஸ் படம் ,மிருதன் எனும் ஜாம்பி படம் , சிம்பு நடிப்பில் உருவாகும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் எனும் ஜனரஞ்சகமான திரைப்படம் என வெவ்வேறு களங்களில் பயணிக்கும் வெற்றி படங்களை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட்.

இந்நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும்வெற்றி படைப்பு “ கீ “ இது குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனத்தின் 10வது தயாரிப்பாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா , நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அணைகா சோடி , R.J. பாலாஜி , பத்ம சூர்யா , ராஜேந்திர பிரசாத் , சுஹாசினி , மனோ பாலா , மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கவுள்ளார் காலீஸ் இவர் இயக்குநர் செல்வ ராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர். நேற்று பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் படபிடிப்பு ஒரே கட்டமாக தொடர்ந்து நடைபெறவுள்ளது

நடிகர்கள்

ஹீரோ – ஜீவா
ஹீரோயின் – நிக்கி கல்ராணி
2nd ஹீரோயின் – அணைகா சோடி
நகைச்சுவை – R.J.பாலாஜி
வில்லன் ( அறிமுகம் ) – பத்ம சூர்யா (மலயாள நடிகர் )
மற்ற கதாபாத்திரங்கள் – ராஜேந்திர பிரசாத் , சுஹாசினி , மனோ பாலா , மீரா கிருஷ்ணன்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் – காலீஸ்
தயாரிப்பு – எஸ். மைகேல் ராயப்பன் , எம். செராபின் ராய சேவியர்
ஒளிப்பதிவு – அனீஸ் தருண் குமார் ( ரங்கூன் படத்தின் ஒளிப்பதிவாளர் )

இசை – விஷால் சந்திரசேகர்
படத்தொகுப்பு – நாகூரன்
கலை – எஸ்.எஸ் . மூர்த்தி
ஆடை அலங்காரம்- ஜாய் கிரிஸில்டா , சாரா.
நடனம் – “ பாபா “ பாஸ்கர் .

இளையராஜா என்கிற மாபெரும் திறமைசாலியை தமிழ்த் திரையுலகிறகு அறிமுகம் செய்தவர் பஞ்சு அருணாசலம். கதையாசிரியராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக தமிழ்த் திரையுலகில் பன்முகம் கொண்ட கலைஞர் இவர். 1941 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தவர்.

பல வெற்றிப் படங்களை தமிழ்த் திரையுலகிற்கு தந்த படஅதிபர் ஏ.எல்.சீனிவாசன், புகழ்ப் பெற்ற பல பாடல்களை தந்து தமிழ்த் திரையுலகின் முன்னோடியாக விளங்கும் கவிஞர் கண்ணதாசன் ஆகிய இருவரும் இவரது சித்தப்பாக்கள்.

பள்ளியில் படிக்கும் போதே புத்தகங்களை விரும்பிப் படிப்பது, பாடல்களை ரசித்துப் பாடுவது என கலைகளில் ஆர்வம் உள்ளவராக இருந்த இவர், பியூசி முடித்தவுடன் சென்னைக்கு வந்தார்.

பெரிய சித்தப்பாவான பட அதிபர் ஏ.எல்.சீனிவாசனிடம், தனது கதை எழுதும் ஆர்வத்தை சொல்லி, பத்திரிகையில் சேர விரும்புவதை தெரிவித்திருக்கிறார். முதலில் நமது ஸ்டுடியோவில் வேலை பார். பிறகு கதை எழுத போகலாம் என்று, அப்போது அவர் குத்தகைக்கு நடத்தி வந்த பரணி ஸ்டூடியோவுக்கு இவரை அனுப்பி வைத்தார்.

இவரின் திரையுலக வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடப்பட்டது அங்குதான்.
பெரிய சித்தப்பா ஏ.எல்.சீனிவாசனின் ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்த பஞ்சு அருணாசலம், சின்ன சித்தப்பா கண்ணதாசன் நடத்தி வந்த ‘தென்றல்’ பத்திரிகை அலுவலகத்துக்கு ஒரு நாள் சென்றார்.
இலக்கிய ஆர்வமும், கதை எழுதும் தாகமும் கொண்ட இவருக்கு அந்த பத்திரிகை சூழ்நிலை பிடித்திருந்தது. சித்தப்பா கண்ணதாசனிடம் தனது ஆர்வத்தை சொல்ல, இவரை தனது உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார், கண்ணதாசன்.

அதன் பிறகு கண்ணதாசன் எழுதிய பல பாடல்களுக்கு உதவியாளராக இருந்தார். பனிரெண்டு ஆண்டுகள் அவரிடம் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாச்சலம், 1962-ல் வெளியான ‘சாரதா’ படத்துக்கு பாடல் எழுதினார். ‘மணமகளே மருமகளே வா வா’ என்ற பாடல் இவருக்கு பெரிய புகழைப் பெற்று தந்தது. அதன் பிறகு கண்ணதாசனின் வாழ்த்துக்களுடன் பாடல்கள் எழுதினார்.

பட அதிபர் ‘சித்ரமகால்’ கிருஷ்ணமூர்த்தி தயாரித்த ‘ஹலோ பார்ட்னர்’ என்கிற படத்திற்கு கதை எழுதினார். கதாநாயகனாக நாகேஷ் நடித்தார். மீண்டும் ‘சித்ரமகால்’ கிருஷ்ணமூர்த்தி தயாரித்த ‘கல்யாணமாம் கல்யாணம்.’ படத்திற்கும் கதை எழுதினார். நகைச்சுவைப் படமான இதில் கே.ஏ.தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், ‘சோ’ முதலானோர் நடித்தனர். படம் வெற்றி பெற்றது.

‘பிலிமாலயா’ ராமச்சந்திரனும், பஞ்சு அருணாசலமும் சேர்ந்து, ‘உறவு சொல்ல ஒருவன்’ என்ற மாறுபட்ட கதையம்சம் கொண்ட படத்தை தயாரித்தார்கள். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து, ‘மயங்குகிறாள் ஒரு மாது’ என்ற படத்துக்கு பஞ்சு அருணாசலம் கதை எழுதினார்.

இவரிடம் உதவியாளராக இருந்த செல்வராஜ் எழுதிய கதைக்கு இவர் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்தார். அன்னக்கிளி என்கிற பெயரில் வெளியான இந்தப் படம், பெரும் வெற்றிப் பெற்று இருநாட்கள் ஓடியது. சிவக்குமார், சுஜாதா நடிக்க தேவராஜ் மோகன் இயக்கிய அந்தப் படத்தில் இசைஞானி இளையாராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார்.

ரஜினிகாந்த் நடித்த ஆறிலிருந்து 60 வரை, எங்கேயோ கேட்ட குரல், குரு சிஷ்யன், வீரா, கமல் ஹாசன் நடித்த கல்யாணராமன், ஜப்பானில் கல்யாண்ராமன், மைக்கேல் மதன காமராஜன், பாக்யராஜ் இயக்கி நடித்த ராசுக்குட்டி, சரத்குமார் நடித்த ரிஷி, விஜயகாந்த் நடித்த அலெக்ஸாண்டர், சிவக்குமார் நடித்த ஆனந்தராகம், சூர்யா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார், சேரன் கதாநாயகனாக அறிமுகமான சொல்ல மறந்த கதை, ரகுமான் நடித்த தம்பிப் பொண்டாட்டி ஆகிய படங்களை தனது பி.ஏ.ஆர்ட்ஸ் பட நிறுவனம் மூலம் தயாரித்தார் இவர்.

சிவாஜி நடித்த கவரிமான் படத்திற்கு கதை, பாடல்கள் எழுதிய இவர், சிவாஜி நடித்த வாழ்க்கை, அவன்தான் மனிதன், ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா, தம்பிக்கு எந்த ஊரு, பாயும் புலி, எங்கேயோ கேட்டக் குரல், முரட்டுக்காளை, கமல் நடித்த சிங்காரவேலன், உயர்ந்த உள்ளம், தூங்காதே தம்பி தூங்காதே, சகலகலா வல்லவன், மீண்டும் கோகிலா, உல்லாசப் பறவைகள், எல்லாம் இன்ப மயம், விஜயகாந்த் நடித்த எங்கிட்ட மோதாதே என முப்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதினார். சில படங்களுக்கு கதை, சிலப் படங்களுக்கு வசனமும் எழுதினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள இவர், புதுப்பாட்டு, கலிக்காலம், தம்பிப் பொண்டாட்டி ஆகிய படங்களையும் இயக்கி இருக்கிறார். இவர் கதை வசனம் எழுதிய தயாரித்த எங்கேயோ கேட்டக் குரல் படத்திற்கு தமிழக அரசின் சிறந்தப் படத்திற்கான முதல் பரிசும், தங்கப் பதக்கமும் கிடைத்தது. அதே போல பாண்டியன் படத்திற்காக சிறந்த கதை ஆசிரியருக்கான விருது பெற்றார் இவர். தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ள இவர், இன்று காலமானார். இவருக்கு வயது 71.

இவருக்கு மீனா என்கிற மனைவியும், சண்முகம், சுப்பிரமணியம் என்கிற இரு மகன்களும், கீதா, சித்ரா என்கிற இருமகள்களும் உள்ளனர். இதில் சுப்பு என்கிற சுப்பிரமனியன், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணனாக நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.