6.8 C
New York
Friday, April 26, 2024

Buy now

Aruvi

இந்திய சினிமாவில் மிகவும் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர் என்பது இந்திய சினிமா மட்டும் இல்லை உலகமே அறிந்த விஷயம் திறமையான உலக தரம் வாய்ந்த படங்கள் இன்று வெளியாவது என்றால் அது தமிழ் சினிமா தான் அதில் ஒரு சில தயாரிப்பாளர்கள் தான் பணத்தை தரமான கலைக்கு மதிப்பு கொடுக்கும் படங்கள் எடுப்பவர்கள் அதில் குறிப்பாக தன்னுடைய எல்லா படங்களும் பணத்தை விட மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்லும் தரமான கதைகள் கொண்ட படங்களை தயாரிக்கும் நிறுவனம் என்றால் அது Dream Warriors இப்படி ஒரு படத்தை எடுக்க சத்தியமாக தைரியம் வேண்டும்
தமிழ் சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே பணம், பிஸினஸ் தாண்டி கலைக்காக படம் எடுப்பவர்கள். அப்படி தொடர்ந்து ஜோக்கர், தீரன் என தரமான படத்தை கொடுத்து வரும் Dream Warriors நிறுவனதான் இவர்கள் முந்தய படைப்புகள் என்றால் ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று அடுத்த படைப்பு தான் இந்த அருவி, அருவியும் தரமான படமாக வந்துள்ளதா? பார்ப்போம்.
அருவி முதல் காட்சியிலேயே தீவிரவாதி என்று விசாரணை நடத்தப்படுகின்றாள். அதை தொடர்ந்து ஒவ்வொருத்தரும் அருவி யார் என்று சொல்ல ஆரம்பிக்க அப்படியே கதை தொடங்குகின்றது.
அருவி சிறு வயதிலிருந்தே சுதந்திரமாக வளரும் ஒரு பெண், அப்பா கொடுத்த முழு சுதந்திரத்தோடு வளரும் அவளுக்கு மிகப்பெரும் ஒரு துன்பம் வர, வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகின்றது.
அதன் பிறகு இந்த சமூகத்தின் மீதுள்ள கோபம், தான் வாழ்க்கையில் சந்தித்த சோகம் என்று அனைத்தையும் சொல்ல ஒரு தொலைக்காட்சிக்கு வர அங்கு பல அதிர்ச்சிகரமான தகவலை அருவி சொல்ல, அதை தொடர்ந்து நடக்கும் பரபரப்பான சுவாரஸ்யமான, உணர்வுப்பூர்வமான காட்சிகளே மீதிக்கதை.
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு தலை சிறந்த நடிகை என்று சொல்லும் அளவுக்கு ஒரு சிறந்த நடிகை என்று சொல்லணும் இதற்க்கு முன் இருந்த ஷோபா சாவித்திரி படாபட் போன்ற நடிகைகளையே இவர் தட்டி தூக்கி விடும் அளவுக்கு ஒரு நடிப்பு பல முன்னணி நடிகர்கள் பல வெற்றிகளை கொடுத்த பின் தான் தன உடல் அமைப்பை மாற்றி நடித்தனர் அதிலும் அந்த வகையில் இதுவரை எந்த நடிகையும் இல்லை என்று சத்தியமாக சொல்லலாம் ஒரு நடிகை மிக அதிக பட்சமாக மொட்டை தான் அடித்துள்ளார் அனால் இந்த படத்தின் நாயகி இந்த படத்துக்காக கிட்டத்தட்ட தன் உடல் எடையை இருப்பது கிலோ குறைத்து மீண்டும் அதிகப்படுத்தி நடித்துள்ளார் காரணம் இந்த கதாபாத்திரம் சிறப்பாகி வரவேண்டும் என்று படம் பார்த்து விட்டு வெளியில் வரும் பொது அந்த பெண் இருந்தால் எல்லோரும் தன்னால் அவரை இருகரம் கூப்பி வணங்குவார்கள் அந்த அளவுக்கு ஒரு நடிப்பு ஏன் உண்மையை சொல்லவேண்டும் என்றால் இந்த படத்தை பார்த்து விட்டு வெளியில் வரும்போது எனக்கு அந்த பிநடிகை மற்றும் இயக்குனர் காலில் விழவேண்டும் போல தான் இருந்தது
அருவி யாருடா இந்த பெண்? என்று ஒவ்வொருவரையும் புருவம் உயர்த்த வைக்கின்றார். முதல் படம் என்று சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள், அதிதி பாலன் தமிழ் சினிமாவிற்கு ரெட் கார்பெட் போட்டு வரவேற்கலாம். அதிலும் இந்த உலகத்தில் வாழ பணம் மட்டும் தான் தேவை என்று பேசும் காட்சிகள் விஜய், அஜித் படத்திற்கு சமமாக கைத்தட்டல் பறக்கின்றது. தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்தே படம் சுற்றி வருகின்றது. நம் கண்களுக்கு தெரியாத பல உண்மைகளை இயக்குனர் அருண் பிரபு உடைத்து வெளியே கொண்டு வந்துள்ளார். அதிலும், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவோரை பற்றி காட்டியுள்ளார்கள் பாருங்கள், திரையரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்கின்றது. அந்த நிகழ்ச்சியின் பெயர் ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ எந்த நிகழ்ச்சி என்பதை நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள்.
அதேபோல இந்த படத்தில் நடித்துள்ள இன்னும் ஒரு பாத்திரம் எமிலி கதாபாத்திரம் இவர் நாயகி அருவியின் தோழியாக வருவார் இவர் ஒரு திருநங்கை ஐவரும் இந்த படத்தின் மிக பெரிய பிளஸ் ஐவரும் நடிப்பில் நானும் சளைத்தவள் இல்லை என்று போட்டிபோட்டு நடித்துள்ளார்
தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்தே படம் சுற்றி வருகின்றது. நம் கண்களுக்கு தெரியாத பல உண்மைகளை இயக்குனர் அருண் பிரபு உடைத்து வெளியே கொண்டு வந்துள்ளார். அதிலும், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவோரை பற்றி காட்டியுள்ளார்கள் பாருங்கள், திரையரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்கின்றது. அந்த நிகழ்ச்சியின் பெயர் ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ எந்த நிகழ்ச்சி என்பதை நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள்.
படத்தின் இயக்குனர் இளம் இயக்குனர் அருண் பிரபு உண்மையில் தமிழ் சினிமாவில் இளமை பாலசந்தர் சத்ய ஜித்த்ரே போன்ற இயக்குனர்களை நினைவுபடுத்துகிறார் அந்த அளவுக்கு ஒரு மிக சிறந்த திறமையான இயக்குனர் இந்த படத்தை நான்கு வருடங்களாக இயக்கியுள்ளார் காரணம் படத்தின் நாயகியின் கதாபாத்திரம் ஏற்ப அவர் உடல்கட்டு முதல் மாற்றியுள்ளார் அதோடு இப்படி ஒரு கதையை எடுக்க எந்த ஒரு இயக்குனருக்கும் சத்தியமாக தைரியம் வராது பெண்கள் புரட்சி என்றால் இது தான் பெண் புரட்சி
படத்தின் வசனம் குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டும், படம் முழுவதும் அருவிக்கு உதவியாக ஒரு திருநங்கை வருகின்றார். அவரும் மிகவும் யதார்த்தமான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் ‘உலக அழகி போனால் கூட பார்க்காதவர்கள், ஏன் அரவாணி சென்றால் இப்படி பார்க்கின்றார்கள்’ என கேட்கும் காட்சி இன்றைய சமுதாயத்திற்கு சவுக்கடி.
படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் என்றாலும் வெறுமென புரட்சி மட்டும் பேசாமல் அதை காட்சிகளாக அருண் எடுத்த விதம் சபாஷ். அதிலும் இரண்டாம் பாதியில் அனைத்து ஆண்களையும் அழ வைத்து அருவி சிரிக்கும் காட்சி செம்ம கிளாஸ்.
படத்தின் கதையை இயக்குனர் எப்படி யோசித்தார் எப்படி இப்படி ஒரு திரைக்கதை என்று எல்லா இயக்குனரையும் வியக்கவைக்கும் அளவுக்கு மிக திறமையான அதோடு நேர்த்தியான இயக்குனரும் உலக சினிமா ஈரானி சினிமா கொரியன் சினிமா என்பார்கள் அவர்கள் எல்லாம் இவரிடம் மண்டியிடவேண்டும் அந்த அளவுக்கு ஒரு திறமையான ஒரு இயக்குனர் என்று தான் சொல்லவேணும்
இந்த படத்தில் நடித்த அத்தனை பெரும் புதுமுகங்கள் அனைவரும் மிக சிறந்த நடிகர்கள் என்று தான் சொல்லணும் இயக்குனர் ஒன்னுரெண்டு பேர் தான் ஏற்கனவே நடித்த முகங்கள் இருந்தும் ஒவ்வொருவரும் தன பங்கை மிக சிறப்பாக செய்துள்ளனர் இயக்குனர் கவிதா பாரதி பீட்டர் என்று ஒரு பாத்திரத்தில் நடித்து இருக்கும் பிரதீப் ஆன்டனி எல்லோரும் மிக சிறப்பாக நடித்துள்ளனர்
இசை ஆரம்பத்தில் பாடல்களாகவே தான் பல காட்சிகள் வருகின்றது, ஆனால், எந்த இடத்திலும் அலுப்பு தட்டவில்லை, ஷெல்லி காஸ்ட் ஒளிப்பதிவு ஏதோ நாமே அந்த இடத்தில் இருப்பது போல் அத்தனை லைவ்வாக படம் பிடித்துள்ளார்.

Previous article
Next article

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE