6.8 C
New York
Friday, April 26, 2024

Buy now

டப்பிங் சீரியல்களை தடுக்க அறவழி விழிப்புணர்ச்சி உண்ணாவிரதம் – தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு முடிவு

மொழிமாற்று தொடர்களால் தமிழ் தொலைக்காட்சியை நம்பி வாழும் சின்னத்திரை கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை தடுக்க அறவழி விழிப்புணர்ச்சி போராட்டம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவிருக்கிறது.
இதுகுறித்து சின்னத்திரை சங்க தலைவர் தளபதி பேசுகையில், அன்று முதல் இன்று வரை சின்னத்திரை சீரியல்களை விரும்பி பார்ப்பதே பெண்கள்தான் அவர்கள் தற்போது இந்தி சீரியல்களில் வரும் பெண்களின் ஆடைகள் முதல் அணிகலன்கள் வரை அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் ரசனை நம் கலாச்சாரத்தைவிட்டு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. நம் கலாச்சாரத்தை நாம் தான் காப்பாற்ற வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் கையெழுத்து வேட்டையும் நடத்தவிருக்கிறோம். சின்னத்திரை முதல் பெரிய திரை வரை உள்ள அனைத்து சங்கங்களில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் வரை அனைவரிடமும் கையெழுத்து வாங்கி அதை மாண்புமிகு அம்மா அவர்களிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம் என்று தலைவர் தளபதி பேசினார்

இக்கூட்டத்தில் சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE