ஹீரோ கார்த்திக் தீவிரமாக காதலித்து காரியம் முடிந்தவுடன் அவர்களை கழற்றிவிட்டு அடுத்த பெண்ணுக்கு பிராக்கெட் போடும் பிளேபாய். இப்படி பல பெண்களை ஏமாற்றி வீணாக போகிறார். இது படத்தின் முதல் பாதி கதை. இரண்டாம் பாதி இந்த கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஜாதி. இட ஒதுக்கீடு, பிராமணர்கள் இன்னும் பிற சாதியினர் பிரச்னை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம்பற்றி அலசல் என சென்று கிளைமாக்ஸை பேலன்ஸ் செய்து முடித்திருக்கிறார் இயக்குனர்.
படத்தின் முதல் பாதியில் 2k கிட்ஸ்களை ஈர்க்கும் வகையில் காதல் கலாட்டா கூத்தடிக்கிறார் ஹீரோ ஆர். எஸ்.கார்த்திக்.
எப்படி சைட்டடிப்பது, எப்படி குட்டிகளை மடக்கி வழிக்கு வரவழைப்பது என்று
செய்முறை பயிற்சி அளித்திருக்கிறார். யாரை எல்லாம் ஆசைப்படு கிறாரோ அவர்கள் எல்லோரையும் பிக்கப் செய்யும் ஹீரோவின் காதல் சிலுமஷங்கள் ஓவராகவே போகிறது. பெண்கள் என்ன இவ்வளவு வீக்கா என்று எண்ணத் தோன்றுகிறது.
முதல்பாதியை ஜாலியாக கொண்டு சென்ற இயக் குனர் இரண்டாம் பாதியில் தான் படத்தின். டைட்டிலுக் கே வருகிறார்.
இதிலும் இரண்டாக கதையை பிரித்து கையாண்டிருக்கிறார் .
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்படி பிராமணர் அல்லாத ஒருவரால் முறைப்படி வேதங்கள் படித்தும் அர்ச்சகர் ஆக முடியாத அவலத்தை புட்டு புட்டுவைத்திருக்கிறார் இயக்குனர். அதேபோல் பிராமணர்களில் உள்ள சாதி பாகுபாட்டையும் சொல்லத் தவறவில்லை .
பட கதாநாயகிகள் மூன்று பேரும் பாத்திரத்துக்கு ஏற்ற பங்களிப்பு செய்திருக்கின் றனர்.
அரசு அதிகாரியாக பொறுப்பேற்று நேர்மையாக ஒரு அதிகாரி நடந்து கொள்ள என்னவெல்லாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை நன்றாகவே படம் பிடித்து காட்டுகிறார்.
ரோகிணி.
குணா பாலசுப்ரமணியம் இசையில் பாடல்கள் ஒ கே. அருண் கிருஷ்ணா ஒளிப்பதிவும் படத்துக்கு கைகொடுக்கிறது.
பிரபு ஜெயராம் ஒரேபடத்தில் எல்லா பிரச்னைகளையும் சொல்ல முயன்றிருக்கிறார்.
