ஊருக்குள் கௌரமாக வாழ்ந்து வரும் பிஆர்வி குடும்பத்தின் இளைய மகனாக வரும் ரவி (அருண் விஜய்) , குடும்பத்தின் மீதும், தனது அண்ணன்கள் சமுத்திரனி, வெங்கட் போஸ், சஞ்சீவ் மூவரின் மீதும் அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார். என்னதான், அருண் விஜய் தனது அண்ணன்களை உடன்பிறந்தவர்கள் என்று பார்த்தாலும், அவர்கள் மூவரும் அருண் விஜய்யை இரண்டாம் தாய் வயிற்றில் பிறந்தவன் தான் என்று நினைக்கிறார்கள்.
இப்படி ஒரு புறம் கதை நகர, மற்றொரு புறம், பிஆர்வி குடும்பத்தின் மீது இருக்கும் பாகையை தீர்த்துக்கொள்ள, ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார், வில்லன் லிங்கம் பகையை சுமுகமாக முடிக்க நினைக்கும் அருண் விஜய், அதற்கான பல முயற்சிகளை எடுக்கிறார். ஆனால், அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிகிறது. இந்த சமயத்தில், பிஆர்வி குடும்பத்தை ஒட்டுமொத்தமாக உருக்குலையும் விதத்தில் சம்பவம் ஒன்று நடக்கிறது.
இதில் சிக்கிக்கொள்ளும் அருண் விஜய், தனது அண்ணன்களின் கண்களுக்கு விரோதியாக தெரிய, உடனடியாக வீட்டை விட்டு அண்ணன் சமுத்திரக்கனியால் வெளியேற்றப்படுகிறார் அருண் விஜய். இதன்பின், மீண்டும் குடும்பம் ஒன்று சேர்ந்ததா? பகையுடன் திரிந்துகொண்டிருந்த லிங்கம், பிஆர்வி குடும்பத்தை என்ன செய்தார்? அருண் விஜய் இதெல்லாம் எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை..ஒற்றை ஆளாகத் தாங்கிப் போராடும் யானை பலம் கொண்டவராக அருண்விஜய். இந்த வேடத்துக்காக உடலை இறுக்கி மீசையை முறுக்கி விடைத்து நிற்கிறார் அருண்விஜய். அண்ணன் குழந்தைகளிடம் பாசம் பிரியாபவானிசங்கரிடம் காதல் என இளகி நிற்குமிடங்களிலும் உயர்ந்து நிற்கிறார்.
அரிசிஆலையில் நடக்கும் ஒரு பெரிய சண்டைக்காட்சியில் அவ்வளவு சக்தியை வெளிப்படுத்தி ஓர் அரக்கன்போல் அடித்துத் துவம்சம் செய்யும் காட்சியில் பிரமிக்கவைத்திருக்கிறார். அந்தச் சண்டையில் சாதிவெறி பிடித்தவர்களைத் துவைத்து எடுப்பது கூடுதல் சிறப்பு.நடிகை ராதிகா தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அண்ணனாக வரும் சமுத்திரகனி வழக்கம்போல் அந்த கதாபாத்திரமாகவே மாறி மிரட்டியிருக்கிறார். இவர்களுடன் அம்மு அபிராமியின் நடிப்பும் படத்திற்கு பலத்தை சேர்த்திருக்கிறது. யோகி பாபு நகைச்சுவை அருமையாக இருக்கிறது. ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது.