மலையாளத்தில் வெளியான ஜோசப் என்ற திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த விசித்திரன் திரைப்படம், மலையாளத்தில் இந்த படம் ஒரு ஸ்லோ பர்ன் திரில்லர் வகையை சார்ந்தது. இந்த மாதிரி திரைப்படங்களுக்கு மலையாள சினிமாவில் நல்ல வரவேற்பு உண்டு . ஆனால் தமிழ் சினிமாவில் ஸ்லோ பர்ன் திரில்லர் வகை படங்கள் வருவதில்லை, அதனால் அதற்கு வரவேற்பும் இல்லை. விசித்திரன் திரைப்படம் இந்த நிலையை மாற்றியுள்ளது. தமிழுக்கு ஏற்றார் போன்ற ஒரு ஸ்லோ பர்ன் திரில்லர் திரைப்படமாக வெளிவந்துள்ளது. படத்தின் மைய கதை பொள்ளாச்சி மாவட்டம் வால்பாறையில் நடைபெறுமாறு உருவாக்கியுள்ளார் இயக்குனர் பத்மக்குமார். நடிகர் ஆர்.கே. சுரேஷ் படத்தில் போலிஸ் அதிகாரியாக இருந்து பணி ஓய்வுக்கு தாமக முன்வந்து வீட்டில் தனியாக வசித்து வருவார். நடிகர் சுரேஷ் மனைவியாக மலையாள நடிகை ஷாம்னா காசிம் நடித்துள்ளார். சுரேஷின் முன்னாள் காதலி திடீர் மரணம் அடைய அதை நேரில் பார்த்த அதிர்ச்சியில் இருக்கும் ஹீரோ தனது மணைவியிடம் சற்று விலகி இருக்க நினைக்கிறார். இதனால் அவரது மனைவியோ அவரை விவாகரத்து செய்து விட, சுரேஷ் தனது மகள் உடன் இருப்பார். மகள் விபத்தில் இறந்து விட விரக்கித்தில் இருக்கும் சுரேஷ் திடீரென்று தனது முன்னாள் மனைவிக்கு மூலைச்சாவு ஏற்பட்டாதாக மருத்துவமனை நிர்வாகம் சொல்ல, உடல் உறுப்புகளை தானம் செய்து விடுகின்றனர்.
இதை சுரேஷ் விபத்து அல்ல. நடந்தது திட்டமிட்ட கொலை என்றும் அவர் மகள் இதை போன்று உடலுறுப்பு தேவைக்காக கொலை நடந்து இருப்பதை கண்டறிந்து கொலையாளிக்கு ஆதர பூர்வமாக மருத்துவமனை மற்றும் கொலையாளியை நிருப்பிக்க சுரேஷ் எடுக்கும் முயற்ச்சிகளும், அதில் இருக்கும் சாவல்களும் புலனாய்வுகளும் என்று திரை கதை செல்கிறது. மலையாளத்தில் ஜோசப் என்ற பெயரில் பத்மகுமார் முன்னாதாக இயக்கி மிக பெரிய வெற்றி பெற்ற படம், அதே இயக்குனர் தமிழில் மீண்டும் இயக்கியிருக்கிறார். வெற்றி வேல் மாஹேந்திரன் ஒளிப்பதிவு நன்றாக காட்சி படுத்திருக்கிறார். அதுவும் படத்திற்க்கு கூடுதல் அழகு சேர்த்து உள்ளது.