16.3 C
New York
Friday, September 13, 2024

Buy now

spot_img

Vishal’s Bold Speech at Raguveera Audio launch at Bengaluru

'ரகுவீரா' என்ற கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு
தமிழ் நாடு தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் அவர்கள் வெளியிட நடிகர் சிவராஜ்குமார் இசை தட்டை பெற்றுக்கொள்வதற்கான நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு சென்ட்ரல் டவுன் ஹாலில் இவ்விழா சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால், சிவராஜ்குமார் அவர்கள் அவசரமாக வெளியூர் பயணம் சென்றதால் சிவராஜ்குமார் அவர்கள் கலந்து கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டது.
பெங்களூருவில் பயங்கர போக்குவரத்து நெரிசலால் விஷால், விழாவுக்கு செல்ல கொஞ்சம் காலதாமதமானது. இசை வெளியீட்டு விழாவுக்கு வருவதற்கு விஷால் வர காலதாமதமானதால், அவ்விழாவில் கலந்து கொண்ட சில கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழர்களைப் பற்றி காரசாரமாக பேசினார்கள். "தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தமிழ்நாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டுள்ளார். அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதே வேளையில், தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று கூறவில்லை. எங்களுக்கே தண்ணீர் இல்லை" என்று தங்களுடைய பேச்சில் குறிப்பிட்டார்கள். அதனை தொடந்து இவ்விழாவில் விஷால் பேசும் போது, "உடல் மண்ணுக்கு... உயிர் தமிழுக்கு. என்றுகூறி போக்குவரத்து நெரிசலால் இங்கு வருவதற்கு காலதாமதமாகிவிட்டது. கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும், தாய்மொழியான தமிழில் பேசுவதில் தமிழனாக பெருமையடைகிறேன்.
தமிழில் தான் பேசுவேன். தவறாக எண்ண வேண்டாம். தண்ணீர் கேட்பது என்பது தமிழர்களுடைய உரிமை.
அதனை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது.
நாம் அனைவரும் இந்தியாவில் இருக்கிறோம். எங்களுடைய உரிமையைக் கேட்கிறோம், அதை தவறு என்று எவராலும் சொல்ல முடியாது. அதே வேளையில், கர்நாடகாவிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது உங்களுடைய கடமை. அதேபோல் தமிழகத்திலும் கர்நாடக மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களுடைய கடமை. மொத்தத்தில் அனைவருமே இந்தியர்கள். வெவ்வேறு மாநிலம் என்று பார்ப்பது அவசியமற்றது.இந்தியா என்று வரும் போது அனைவருமே ஒன்று தான். அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. ஏன் தமிழர்கள் என ஒதுக்கி, தண்ணீர் தர மாட்டோம் என்கிறீர்கள். கர்நாடகாவுக்கு மட்டுமே தண்ணீர் என்று கிடையாது. எங்களுக்கும் உரிமையிருப்பதால் கேட்கிறோம். தண்ணீர் கேட்கக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. கர்நாடகாவிலிருந்து எந்தவொரு தயாரிப்பாளரும் தமிழகத்துக்கு வந்து படம் தயாரித்தால், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முழு ஒத்துழைப்பு அளிப்போம். கர்நாடக தயாரிப்பாளர் சங்கத்திலும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் கண்டிப்பாக செய்து தர தயாராக இருக்கிறோம்" என்று பேசினார் விஷால். இதுவரை தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு சென்ற எவரும் இது மாதிரி பேசியதில்லை. விஷாலின் வெளிப்படையான பேச்சால், இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். நிழச்சியை முடித்தபின் புனித்ராஜ்குமார் அவருடைய வீட்டிற்கு சென்று மறைந்த அவருடைய தாயார் படத்திற்கு விஷால் மலர் துவி மரியாதை செலுத்தினார்.

Previous article
Next article

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE