பிறந்தநாள் கொண்டாட்டடங்களை தவிர்த்து ; நற்பணியில் இறங்கிய நடிகர் விஷால் !!
பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து நடிகர் விஷால் ICSA சென்டரில் இன்று நாடு திரும்பவிருக்கும் இலங்கை அகதிகளுடன் நற்பணி நாளாக கொண்டாடினார். விழாவில் அவர் பேசியதாவது ; நான் தாமிரபரணி படபிடிப்புக்காக இராமேஸ்வரத்தில் இருந்த போது தான் அங்கு இருக்கும் இலங்கை அகதிகள் முகம் பற்றி எனக்கு தெரியவந்தது. எனக்கு முகாமை பற்றிய இன்னும் பல தகவல்களை என் அண்ணி ஸ்ரேயா அவர்களின் தோழியான பூங்கோதை சந்திரஹாசன் மூலமாக தெரிந்துகொண்டேன். மேலும் அவர் இயக்குனராக இருக்கும் “OFERR” என்னும் NGOவை பற்றிய என்னிடம் கூறியவுடன் எனக்கும் அவர்களுடன் சேர்ந்து நற்பனி செய்ய ஆர்வம் ஏற்ப்பட்டு தொடர்ந்து செய்து வருகிறேன். ஒவ்வொரு முறை நான் “OFERR” சென்று திரும்பும் போது என்னுள் புத்துணர்ச்சி ஏற்ப்படுவதை நான் உணர்கிறேன். என்னுள் அரசியல் நோக்கம் இருப்பதால் தான் நான் இதை போன்ற நற்பணிகளை செய்கிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். எனக்கு சத்தியமாக அதைபோன்ற அரசியல் நோக்கம் துளி கூட இல்லை. நான் ஒரு நடிகன், மக்களை மகிழ்விக்கும் மகத்தான பொறுப்பு எனக்கு உள்ளது. அதை மட்டும் சரியாக செய்தால் போதும் என்று நான் நினைகிறேன். மேலும் நான் Traffic constable ஆக இருந்து நற்பணி அற்ற நினைபவர்களுக்கு சரியான வழியை காட்டவே விரும்புகிறேன். நடிகர் கார்த்தி நேற்று இரவு என்னிடம் பேசி கொண்டு இருக்கும் போது பெண் குழந்தைகள் பலர் தாங்கள் படிக்கும் பள்ளியில் கழிப்பறை இல்லாத காரணத்தினால் அவர்களுடைய படிப்பையே நிறுத்திவிட்டு சென்றதாகவும் , அதை கருத்தில் கொண்டு கார்த்தி பாரிஸ் உள்ள அரசு பள்ளி ஒன்றுக்கு அவருடைய அகரம் அறகட்டளை மூலமாக ஒரு இலட்சம் ருபாய் செலவில் கழிப்பறை கட்டிகொடுதுள்ளார் , அதை போலவே ஒரு லட்சம் ருபாய் கொடுத்தால் வேறு ஒரு பள்ளியில் கழிப்பறை கட்டி கொடுக்கலாம் என்ற செய்தியை என்னிடம் தெரிவித்தார். நானும் அதை நிச்சயம் செய்ய உள்ளேன் என்று கூறிய விஷால். அங்கு வந்திருந்து இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மாணவர்களுக்கும், ICSAவை சேர்ந்த முப்பது மாணவர்களுக்கும் , உடலால் சவால்விடப்பட்ட மாணவர்களுக்கும் , பார்வையற்றவர்களுக்கும் ஒரு லட்சத்தி அறுபத்தி ஏழாயிரம் ரூபாயை நன் கொடையாக கொடுத்தார். அது போக அவர்களுக்கு shoe மற்றும் socksயை வழங்கினார். மேலும் socks வழங்க தன்னுடைய நற்பணி மன்றத்தினர் மூலமாக மக்களை அணுகி நிதி பெற்று மேலும் இதை சிறப்பாக செய்யவுள்ளதாக கூறினார். தனி ஒருவனாக இருந்து பணியாற்றுவதை விட பலர் பேர் கைகோர்த்து இந்த நல்ல விஷயத்தை செய்தால் சிறப்பாக அமையும் என்று கூறினார் புரட்சி தளபதி விஷால் அவர்கள்.