தமிழ் சினிமாவில் நிறைய தமிழ் படங்கள் வடசென்னையை மையமாக வைத்து வந்துள்ளது அதில் மிகவும் வித்தியாசமான கதை என்று தான் சொல்லணும் வடசென்னையில் நடக்கும் விக்ரமாதித்தன் வேதாளத்தின் கதை என்று சொல்லலாம். இயக்குனர்கள் அந்த ளவுக்கு மிக வித்தியாசமாக கதையும் திரைக்கதையும் அமைத்துள்ளார்கள்.
வேதாளமாக விஜய் சேதுபதி athavathu வேதா விக்ரமாதித்தனாக மாதவன் athavathu விக்ரம் இது தான் படத்தின் கதை என்பதை விட திரைகதை என்று தான் சொல்லணும் புதுமையான வித்தியாசமான திரைகதை படத்தின் வேகம் சும்மா நூறு கிலோமீட்டர் வேகத்தில் இருக்கிறது அந்த அளவுக்கு பரபரப்பாக அமைத்துள்ளனர் இயக்குனர்கள் என்று தான் சொல்லணும்
ஒரு சிறந்த படத்துக்கு மிக முக்கியமானது திரைக்கதையும் கதாபாத்திரங்களும் அதிலே இயக்குனர்கள் புஷ்கர் காயத்திரி மிக பெரிய வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று தான் சொல்லணும் தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிக சிறந்த நடிகர்கள் என்றால் அதில் இந்த இருவரும் இருப்பார்கள் அந்த இவர்கள் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் என்று ஆணித்தரமாக சொல்லலாம்.
கோவத்திலும் உணர்சிகரமான என் கௌண்டர் போலீஸ் மாதவன் படு லோக்கல் தாதா வாக விஜய் சேதுபதி மாதவன் மனைவியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் புள்ளியாக கதிர் இவர் தான் விஜய் சேதுபதி தம்பி சந்திராவாக வரலக்ஷ்மி கதிர் காதலி என் கௌண்டர் இன்ஸ்பெக்டராக பிரேம் மற்றும் பலர் நடிப்பில் P.S.வினோத் ஒளிப்பதிவில் சாம் இசையில் படத்தின் பக்கபலமான வசனம் மணிகண்டன் படத்தின் கதை எழுதி இயக்கி இருப்பவர்கள் புஷ்கர் காயத்திரி இவர்கள் கணவன் மனைவி இணைந்து இயக்கம் படம்.
படத்தின் கதை களம் :
வடசென்னையில் மிக பெரிய தாதா விஜய் சேதுபதி இவர்களை என்கௌண்டர் செய்யும் குழுவில் மாதவன் பிரேம் மற்றும் ஐந்து போலீஸ் குழுவினர்கள் விஜய் சேதுபதியை எப்படியாவது என்கௌண்டர் பண்ணனும் என்ற வெறியில் மாதவன் அவரின் மனைவி விஜய் சேதுபதி வக்கீலாக ஷர்த்தா ஸ்ரீநாத் பிரேம் மாதவன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் பிரேம் மகனுக்கு ஒரு கொடிய நோய் இதற்கு மருத்துவ செலவுக்கு அதிகம் பணம் வேண்டும் இதனால் விஜய் சேதுபதி எதிரியிடம் பணம் வாங்கி கொதம்பி அப்பாவி தம்பி கதிர் கொலை செய்யபடுகிறான் அவனின் காதலியும் கொலை செய்யபடுகிறாள் இவர்களை எப்படி கொலை செய்தார்கள் ஏன் கொலைசெய்தார்கள் என்று விஜய் சேதுபதி மாதவன் மூலமாகவே கண்டுபிடித்து கொலை செய்கிறார் இது தான் கதைகளம் இதை எப்படி மாதவன் மூலம் செய்கிறார் என்பது தான் மீதிகதை
படத்துக்கு மிக பெரிய பலம் என்றால் அது திரைக்கதையும் நடித்த அனைத்து நடிகர்களும் தான் என்று சொல்லணும் குறிப்பாக விஜய் சேதுபதி மற்றும் மாதவன் போட்டி என்றால் கொஞ்சம் நஞ்சம் இல்லை அந்த அளவுக்கு போட்டி போட்டு இருகிறார்கள் அதிலும் விஜய் சேதுபதி பல இடங்களில் மாதவனை சாப்பிட்டுவிட்டு போய்விடுகிறார் என்று தான் சொல்லணும் இருவரும் மோதிக்கொள்ளும் காட்சி எல்லாம் அரங்கத்தில் அனல் பறக்கிறது என்று தான் சொல்லணும் மாதவனுக்கு இரண்டாவது வெற்றி விஜய் சேதுபதிக்கு தொடர்வேற்றி என்று தான் சொல்லணும்
தம்பியாக வரும் கதிர் சிறிது நேரம் வந்தாலும் செமையான நடிப்பு என்று சொல்லணும் அதேபோல வரலக்ஷ்மி மீண்டும் பட்டையகிளப்பி இருக்கிறார். அதிலும் விஜய் சேதுபதியிடம் பேசும் இடங்களும் சரி கதிர் காட்சிகளும் மிக நிறைவாக செய்துள்ளார் வடசென்னை பெண்போலவே இருக்கிறார். என்று தான் சொல்லணும்
ஷ்ரத்தா ஸ்ரீநாத் மாதவன் காதல் மோதல் இந்த இரண்டும் மிகவும் ரசிக்கவைக்கிறது ஒரே கேஸ் கணவன் மனைவி கவனித்தல் ஏற்படும் தொந்தரவுகளை சண்டைகளை மிகவும் எதார்த்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்கள்.
படத்துக்கும் இயக்குனருக்கும் மிக பெரிய பலம் என்றால் அது ஒளிப்பதிவாளர் P.S, வினோத் என்று தான் சொல்லணும் வடசென்னையை மிக அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் அதேபோல படத்துக்கு மேலும் ஒரு பலம் இசையமைப்பாளர் சாம் திரைக்கதைக்கு ஏற்ப பின்னணி இசை இது மேலும் மிக பெரிய பலம் என்றும் சொல்லணும்.
படத்தின் இயக்குனர்கள் ஒரு புரானகதையை இன்றைய காலத்துக்கு ஏற்ப மிக சிறந்த முறை மாற்றி அதுக்கு தேவையான திரைகதை அமைத்து அதிலும் மிக சிறந்த திரைகதை அமைத்து அதில் மிக பெரிய வெற்றியைகண்டுள்ளார்கள் என்று தான் சொல்லணும் தமிழ் சினிமாவுக்கு இந்த வருடம் கிடைத்த மேலும் ஒரு மைல்கல் என்று தான் சொல்லணும்.