15.8 C
New York
Tuesday, October 8, 2024

Buy now

spot_img

Vijay Sethupathi Launched 1St look of “Parol”

ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் 'பரோல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதி

ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே "காதல் கசக்குதய்யா" படத்தை இயக்கியவர்

’பரோல்’ படத்தில் பீச்சங்கை படத்தில் நடித்த கார்த்திக் ஆர். ஸ் மற்றும் சேதுபதி & சிந்துபாத் படத்தில் நடித்த லிங்காவும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மோனிஷா மற்றும் கல்பிக்கா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். மேலும் வினோதினி, ஜானகி சுரேஷ், டி.கே.ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் ’பரோல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். படத்தின் போஸ்டரும், மோஷன் போஸ்டரும் வரவேற்ப்பை பெற்றது மட்டுமன்றி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.

’பரோல்’ படத்தை பற்றி இயக்குனர் துவாரக் ராஜா கூறுகையில், “இது நான் ரெண்டாவது முறையா இயக்குற முதல் படம். ஒரு 48 மணிநேரத்துல  வியாசர்பாடில ஆரம்பிச்சு திருச்சி, மதுரை போயி திரும்பி விக்ரவண்டி, சேலையூர், வியசார்பாடின்னு வந்து முடியுற கதைல க்ரைம், திரில்லர், ஆக்ஷன், டிராமா-ன்னு கலந்து கட்டி அடிச்சிருக்கோம்.  டைட்டில் பரோல்-ன்றதால நிறைய பேர் இத பொலிடிக்கல் படமா-ன்னு கேக்குறாங்க. இது பரோல் சம்மந்தமான politics பேசுற Non-political படமா இருக்கும்' என்று கூறியுள்ளார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு - மதுசூதனன் (ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட்)
எழுத்து இயக்கம் - துவாரக் ராஜா
ஓளிப்பதிவு - மகேஷ் திருநாவுக்கரசு
இசை - ராஜ்குமார் அமல்  
படத்தொகுப்பு - முனீஸ்
மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE