சீனு ராமசாமி இயக்கும் அரசியல் படம் - ஹீரோ விஜய் சேதுபதி
-------------------------------
’தர்மதுரை’ படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி - இயக்குநர் சீனு ராமசாமி கூட்டணி மீண்டும் இணைகிறார்கள். இந்த முறை அரசியல் சம்மந்தமான படத்தை இயக்குகிறார் சீனு.
‘மாமனிதன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதை தென்னெந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரைப் பற்றிய கதையாம். இப்படத்தின் திரைக்கதை முழுவதையும் எழுதி முடித்துவிட்ட சீனு ராமசாமி, விஜய் சேதுபதிக்காக காத்திருக்கிறாராம்.
கைவசம் 5 படங்கள் வைத்திருக்கும் விஜய் சேதுபதி, இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் படப்பிடிப்பில் பங்கேற்பதாக சீனு ராமசாமியிடம் தெரிவித்துள்ளதால், தற்போது அவர் படத்தின் நாயகியை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
---------------------