13.1 C
New York
Friday, March 24, 2023

Buy now

Venkatesh in Pan India film “Saindav”

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’

விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக தயாராகும் ‘சைந்தவ்’

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் தயாராகும் ‘ வெங்கி 75’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்தப் படத்திற்கு ‘சைந்தவ்’ என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான காணொளியும், படத்திற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘ஹிட்’ பர்ஸ்ட் கேஸ் மற்றும் ‘ஹிட்’ செகண்ட் கேஸ் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘சைந்தவ்’. இதில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விக்டரி வெங்கடேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை பி. ஹெச். கேரி கவனிக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், கிஷோர் தல்லூர் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

விக்டரி வெங்கடேஷ் – சைலேஷ் கொலனு- நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் ‘சைந்தவ்’ படத்தின் பிரத்யேக காணொளியில், நாயகன் விக்டரி வெங்கடேஷ் தாடியுடன் கையில் துப்பாக்கி ஏந்தியபடி தோன்றுவதும், பின்னணியில் கார் வெடித்து சிதறுவதும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ‘சைந்தவ் ‘ படத்தின் டைட்டில் போஸ்டர், விக்டரி வெங்கடேஷ் அதிரடியாக நடிப்பதாகவும், தீவிரமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் குறிப்பிடுகிறது.

மேலும் இந்த காணொளியில் நாயகன் விக்டரி வெங்கடேஷ், சந்திரபிரஸ்தா என்ற கற்பனை நகரத்தில் ஒரு மருந்துக் குப்பியைக் கொண்ட குளிர்பானப் பெட்டியுடன் துறைமுகப் பகுதிக்குள் நுழைகிறார், பின்னர் அவர் ஒரு கொள்கலனில் இருந்து துப்பாக்கியை வெளியே எடுக்கிறார். கடைசியாக, தன்னால் கடுமையாக தாக்கப்பட்ட குண்டர் குழுவை, பார்த்து எச்சரிக்கிறார். இதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

படத்தின் தன்மை, தொனி மற்றும் வெங்கடேஷ் எந்த வகையான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்பதை இந்த காணொளியில் காட்சி படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாகவும், படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட்டின் இரண்டாவது தயாரிப்பான ‘சைந்தவ்’, நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இருப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://bit.ly/SaindhavGlimpse

Related Articles

Stay Connected

22,043FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles