21.3 C
New York
Saturday, September 21, 2024

Buy now

spot_img

Vemal and Ashna zaveri in ‘Ivanukku yenkeyo macham irukku’

                                பிரபல நடிகை தயாரிப்பாளர் ஆனார் 

                                    விமல் ஆஷ்னா சவேரி நடிக்கும்

                                " இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு "    

AR.முகேஷ் இயக்குகிறார் விமல் ஆஷ்னா சவேரி ஜோடியாக நடிக்கும் படத்திற்கு "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" என்று பெயரிட்டுள்ளனர்...

இந்த படத்தை சாய் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக சர்மிளா மாண்ரே, R.சாவண்ட் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். சர்மிளா மாண்ரே கன்னட பட உலகின் பிரபல நடிகை.கன்னடத்தில் உள்ள பிரபல நடிகர்கள் அனைவருடனும் சுமார் 40 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தயாரிப்பாளரான சர்மிளா மாண்ரேவை முதன் முதலாக கதா நாயகியாக கன்னடத்தில் அறிமுகப்படுத்தியவர் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் இயக்குனர்AR முகேஷ்.

இப்போது சர்மிளா மாண்ரே முதன் முதலாக தயாரிக்கும் படத்தை இயக்கும் பொறுப்பை தன்னை நடிகையாக அறிமுகப் படுத்திய இயக்குனருக்கு அளித்திருப்பது அவரது நன்றிக்கனின் வெளிப்பாடு. விமல் கதா நாயகனாக நடிக்கிறார்.

ஆஷ்னா சவேரி நாயகியாக நடிக்கிறார்..

மற்றும் ஆனந்தராஜ் சிங்கம்புலி வெற்றிவேல்ராஜா ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு           -        கோபி /  இசை      -        நட்ராஜ் சங்கரன்

பாடல்கள்   -        விவேகா /  கலை   -        வைரபாலன் 

நடனம்        -        கந்தாஸ்

சண்டை பயிற்சி    -        ரமேஷ்

எடிட்டிங்               -        தினேஷ்

தயாரிப்பு மேற்பார்வை  -         சுப்ரமணி 

தயாரிப்பு  -   சர்மிளா மாண்ரே, R.சாவண்ட்

திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் -  AR.முகேஷ். இவர் "இன்று முதல் " ஆயுதம்,கனனடத்தில் சஜினி மற்றும் ஜோக்கர் என்கிற ஹாலிவுட் படங்களை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது.

இது கிளாமர் மற்றும் ஹுயூமர் படமாக உருவாகி வருகிறது..முதல் கட்டப் படப்பிடிப்பு 

லண்டனில் பற்று நாட்கள் நடை பெற்றது. இப்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.  தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் ஜாலியான ஒரு பொழுது போக்கு அரங்குக்குள் நுழைந்த அனுபவத்தை உணர்வார்கள்.

எல்லா தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர்.

 

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE