ஜீவாவுக்கு நூறு சதவீதம் பொருத்தமாக இருக்கும் கதாபாத்திரம். எதை பற்றியும் யோசிக்காமல் ஜாலியாக இருக்கும் வேடத்தில் பட்டையை கிளப்பும் ஜீவா, காதல் காட்சிகளிலும் படு அமர்க்களப்படுத்துகிறார். முதலை தங்கை பார்த்து காதல் கொள்பவர், பிறகு அக்காவை பார்த்து அவர் பின்னாள் சுற்றும் காட்சிகளும், காதலியை சந்திக்க காண்டம் எடுத்து செல்லும் காட்சிகளிலும் திரையரங்கே அதிர்கிறது.காதலுக்கு நூல் விடும் வேலையை தவிர ஜீவாவுக்கு வேறு வேலையில்லாததால் அவரது நடிப்பும் ஒரு வட்டத்துக்குள் சுருங்கி விடுகிறது. வி டி வி கணேஷ் ஏ ஜோக் மன்னனாக வருகிறார்.மலையாள பெண்களாக வரும் காஷ்மீராவும், பிரக்யாவும் இளசுகளை ஜொள்ளுவிட வைக்கின்றனர். மலையாள பெண்களென்றாலே தமிழ்நாட்டு இளைஞர்களிடம் ஒரு மவுசு இருக்கிறது என்று மகள்களிடம் தந்தை சித்திக் கூறுவதில் உண்மையிருக்கிறது.கதையே இல்லை என்றாலும் திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம் பல படங்கள் ஜாலியாக நகர்வதோடு, இரண்டரை மணி நேரம் எப்படி போனது என்பதே தெரியாது. அப்படி ஒரு படமாக இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சந்தோஷ் ராஜன், மாட்டாத வகையில் இங்கு யாரும் உத்தமன் இல்லை, என்ற கருவை வைத்துக்கொண்டு இளைஞர்களுக்கான படமாக கொடுத்திருக்கிறார்
