2.1 C
New York
Thursday, December 5, 2024

Buy now

spot_img

ulkuthu-Review

கடற்கரை சார்ந்த கதைகளைக் கொண்ட படங்கள் என்றாலே தமிழ் சினிமாவில் ஒரு கவனத்தை ஈர்க்க வைக்கும். அப்படி ஒரு படமாக வந்திருக்கிறது கார்த்திக் ராஜு இயக்கியுள்ள ‘உள் குத்து’.
கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ் மற்றும் நந்திதா பாலசரவணன் திலிப் சுப்புராயன் ,ஜான் விஜய், சரத் லோகித், சாயாசிங் மற்றும் பலர் நடிப்பில் ஜஸ்டின் பிரபாகர் இசையில் உள்குத்து படம் உருவாகியுள்ளது .

முதல் படத்தில் வெற்றிக்கனியை பறித்த இயக்குனர் கார்த்திக் ராஜு இந்த படத்திலும் அதை தக்க வைத்து கொண்டார் என்று தான் சொல்லணும் காரணம் மிக சிறந்த திரைக்கதை தான் முக்கிய காரணம் படத்துக்கு காதல் ஆக்ஷ்ன் செண்டிமெண்ட் சிறந்த இசை முக்கியமாக சிறந்த கதாபாத்திரங்கள் நட்சத்திர தேர்வு என எதிலும் குறை வைக்காமல் மிகவும் நேர்த்தியான ஒரு படைப்பாக கொடுத்துள்ளார்.

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதை ஓட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது படத்துக்கு மிக முக்கிய பலம் என்று தான் சொல்லணும் அதே போல இயக்குனரின் என்னத்துக்கும் கதைக்கும் என்ன தேவை என்று படத்தில் பணிபுரிந்த அனைவ்ரும் உணர்ந்து செய்துள்ளனர் குறிப்பாக ஒளிப்பதிவாளர் இசை நடிகர்கள் இப்படி யாரும் குறை சொல்லமுடியாத அளவுக்கு உணர்ந்து செய்துள்ளனர்
தனது முதல் படமான திருடன் போலீஸ் படத்திலே சிறந்த இயக்குனர் என்ற முத்திரையை பதித்தவர் கார்த்திக் ராஜு. தனது இரண்டாவது படத்தில் மீண்டும் அஅதை நிரூபித்துள்ளர்
மீனவ கிராமம் முட்டம். அங்கு நாயகன் தினேஷ் தனியாக அமர்ந்திருக்கிறார். அப்போது அங்கு வரும் பாலசரவணனின் நட்பு கிடைக்க அவருடன் தங்கிக் கொள்கிறார் தினேஷ்
அந்த ஊரில் சரத் மிகப்பெரிய ரவுடி. அவரும் அவர் தம்பியாக வரும் திலீப் சுப்ராயனும் அந்த ஊரில் கந்து வட்டி தொழில் செய்து அனைவரையும் துன்புறுத்தி வருகின்றனர்.

இப்படியாக ஒரு நாள் திலீப் சுப்ராயனின் வலது கையாக இருக்கும் ஒருவரை தினேஷ் அடிக்கிறார். இதனால் திலீப் சுப்ராயனின் பகையை சம்பாதிக்கிறர் தினேஷ்.
பிறகு திலீப் சுப்ராயனிடம் சமாதனம் ஆகி அவருடன் நட்பாக பழகுகிறார். பிறகு ஒருநாள் திலீப் சுப்ராயனை குத்தி கொல்கிறார் தினேஷ்… ஏன் என அனைவரும் விழிக்க.. கதை பின்னோக்கி நகர்கிறது… ப்ளாஷ்பேக் முடிந்ததும் க்ளைமாக்ஸ் காட்சிகளோடு கதை முடிகிறது…
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் என்றால் தேவையில்லாத காட்சிகள் என்று எதுவுமே படத்தில் இல்லை. படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்கு செல்வது அருமை. பாடல் காட்சிகள் கூட மிகவும் குறைவான நிமிடங்கள் தான், அதுவும் கதையோடு சேர்ந்து பயணிக்கிறது…

தினேஷ் மீண்டும் தன திறமையை நிரூபித்துள்ள ஒரு படம் என்று தான் சொல்லணும் கொஞ்சம் வலுவான கதாபாத்திரம் இருந்தும் அதை மிகவும் உணர்ந்து கதைக்கு என்ன தேவையோ அதை மிகவும் எதார்த்தமாக செய்துள்ளார்

நந்திதா சொல்லவா வேணும் கொடுத்த பங்கை மிகவும் அழகாக செய்துள்ளார் அதே போல சாயாசிங் ஜான் விஜய் எல்லோரும் தன் பாத்திரத்தை மிகவும் உணர்ந்து நடித்து இருப்பது படத்துக்கு மிக பெரிய பலம்
படத்துக்கு மிக பெரிய பலம் வில்லனாக வரும் சரத் லோகித் என்று சொல்லணும் இன்றும் இந்த மாதிரி கதாபாத்திரம் கந்து வட்டி கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மிகவும் அழகா வெளிப்படுத்தியுள்ளார்

முதல் பாதியில் நல்ல ஒரு விறுவிறுப்பு… ஆங்காங்கே பால சரவணின் டைமிங் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன. ஒரு சில காட்சிகள் மட்டுமே நந்திதா வந்தாலும் அழகு சிரிப்பில் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ள வைக்கிறார்.
அமைதியாக தோற்றமளிக்கும் தினேஷ் பலம் கொண்டு எதிரிகளை துவம்சம் செய்வது ரசிக்க வைத்தாலும், முகத்தில் எந்த வித ரியாக்‌ஷனும் இல்லாதது கதையை கொஞ்சம் தொய்வடைய வைத்திருக்கிறது.
படத்தின் இரண்டாம் பாதியில் ஆரம்பத்தில் கொஞ்சம் கதை இழுத்துக் கொண்டு சென்றாலும், அதன்பின் சூடு பிடித்து நடைபோடுகிறது.
வில்லனாக வரும் சரத், திலீப் சுப்ராயன் வில்லத்தனத்தை அமைதியாக இருந்து மிரட்டலாக கொடுத்திருக்கிறார்கள். ஸ்ரீமன், ஜான் விஜய் கதாபாத்திரத்திற்கு பொருத்தம்.
ஜஸ்டின் பிரபாகரனின் பின்னனி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.

வர்மாவின் கேமரா, கடற்கரை பகுதிகளையும், அதை ஒட்டி உள்ள பகுதிகளை மிக அழகாக காட்டிருக்கிறது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE