.@Udhaystalin's Next Movie Named as an #Angel... He joins for the first time with #RX100 Fame @starlingpayal & @anandhiactress. Directed by #KSAdhiyaman Produced by #OSTFilms #RamaSaravanan. Music @immancomposer
உதயநிதி ஸ்டாலினுடன் பாயல் ராஜ்புத், 'கயல்' ஆனந்திஇணையும் “ஏஞ்சல்”!
“ஏபிசிடி”, “நேபாளி” ஆகிய படங்களைத் தொடர்ந்து “OST FILMS” ராமசரவணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் “ஏஞ்சல்”. “தொட்டாசிணுங்கி”, “சொர்ணமுகி”, “பிரியசகி”, “தூண்டில்” போன்றபடங்களின் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார்.
அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதிஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்குவெற்றிப்படமான “RX 100” படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் மற்றும்“கயல்” ஆனந்தி ஆகியோர் நடிக்கிறார்கள். டி.இமான்இசையமைக்கிறார். ஒளிப்பதிவு: கவியரசு, படத்தொகுப்பு: ஜீவன்,ஸ்டண்ட் : ரமேஷ் (விஸ்வரூபம் 2) கலை இயக்குநர்: சிவா, நடனஇயக்குநர்: தினேஷ்.
“உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணித்த பின்னும்மறக்காது ஏஞ்சல்” என்பதை உணர்த்தும் “ரொமாண்டிக் ஹாரர்”ஜானரில் இப்படம் உருவாகிறது. மேலும், இப்படத்தின் பெரும்பாலானகாட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது.