30 வருடத்துக்கு முன் அனாதை விடுதியில் இருக்கும் எல்லா குழந்தைகளும் பலரால் தத்தெடுக் கப்படுகின்றனர். அந்த குழந்தை களை 3 வருடம் கழித்து ஒரு கூட்டம் கடத்தி வெளிநாட்டுக்கு விற்கிறது. இதை தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரி அருண்பாண் டியன் பின்னர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கிறார். அவரது மகன் அதர்வா மறைமுகமாக போலீ ஸுக்கு உதவும் பணியில் சேர்கிறார் அப்போது தான்யா நடத்தும் அனாதை இல்லத்தி லிருந்து குழந்தைகளை வில்லன் கூட்டம் திட்டமிட்டு கடத்துகிறது. அதை தடுக்க அதர்வா போராடுகிறார அவர் எப்படி குழந்தைகளை காப்பாற்றுகிறார். கடத்தல் கூட்ட தலைவனை எப்படி அழிக்கிறார் என்பதற்கு படம் பதில் அளிக்கிறது.100 படத்தை போலவே இந்த படத்திலும் காவல்துறை அதிகாரியாக அதர்வா நடித்துள்ளார். ஃபிட்டான உடலுடன் தனக்கே உரித்தான பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அதர்வா. காதல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என காட்சிக்கு காட்சி தன்னால் முடிந்த அளவுக்கு இயலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதர்வாவின் அப்பாவாக நடித்துள்ள அருண் பாண்டியன் முன்னாள் காவல்துறை அதிகாரியாகவும் அல்சைமர் என்ற ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளவராகவும் நடித்துள்ளார். இல்லை இல்லை அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.படம் முழுக்க அதர்வாவின் ஆக்ஷன் அதிரடி கொடிகட்டி பறக்கிறது. காக்கிசட்டைபோடாத போலீஸாக ஸ்பை வேலைகளை தனது டீமை வைத்து சரியாக காய் நகர்த்தி வில்லனின் அடியாட் களை துவம்சம் செய்கிறார்.குழந்தைகளை கடத்த வில்லன் கூட்டம் நடத்தும் நகர்வுகளை கண் காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து முறியடிப்பதும், போலீஸை திசை திருப்பிவிட்டு சிமென்ட் கலவை கலக்கும் டிரக்கில் குழந்தைகள் கடத்தப்படு வதை கண்டுபிடித்து காரில் துரத்தும் அதர்வா சேசிங் காட்சி களில் பரபரக்க வைக்கிறார்.ஞாபக மறதி தந்தை அருண் பாண்டியனுக்கு “உங்களுக்குள் ஒரு போலீஸ்காரன் இருக்கிறான் அவனுக்கு ஞாபகமறதி இருக்காது. வில்லன் கூட்டத்தினர் நம் குடும்பத்தினரை அழிக்க வந்தால் அவர்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று நம்பிக்கையூட்டும் அதர்வா மனதில் பதிகிறார்.கிரைம் திரில்லர் கதையாக உருவாகியுள்ள ட்ரிகர் படத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்கலாம்.
Trigger
0
160
Next article