புதிய தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கும் தயாரிப்பாளர் R.ரவிந்தரனின் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்
அஜீத் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், விஜய் நடித்த திருப்பாச்சி, கத்தி மற்றும் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா, அறம் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தவரும் வெற்றிவேல், சிவலிங்கா வெற்றிபடங்களை டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்த R.ரவீந்திரன் தனது புதிய பயணத்தை துவங்கவிருக்கிறார்.
"மிட்டா" (Mitta) எனப்பெயரிடப்பட்டுள்ள புதிய Web Series ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் டிஜிட்டல்ஸ் சார்பில் R.ரவீந்திரன் தயாரிக்கின்றார்.
D.P.பிரதிப் இத்தொடரை இயக்க, அரவ விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்கின்றார்.
பாரிஜாதம், போடா போடி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தரண், இந்த வெப் தொடருக்கு இசையமைக்கின்றார்.
நடிகர் நடிகையர் பற்றிய விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
இயக்கம் - D.P.ப்ரதீப்
ஒளிப்பதிவு - அரவ விஸ்வநாத்
இசை - தரண்