12.6 C
New York
Wednesday, April 23, 2025

Buy now

spot_img

The movie Pindi Ki Pappi Relasi as “Kiss Kiss Kissik”

  1. "பிண்டு கி பாப்பி" என்ற திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "கிஸ் கிஸ் கிஸ்ஸிக்" என்ற பெயரில் வெளியாகிறது!!

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள, இந்தி மொழி, பொழுதுபோக்கு படமான "பிண்டு கி பாப்பி" இப்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் "கிஸ் கிஸ் கிஸ்ஸிக்" என்ற பெயரில் மார்ச் 21 ஆம் தேதி இந்தி பதிப்புடன் இணைந்து வெளியாகிறது.

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடுகிறது, மேலும் இப்படத்தை மிகப்பெரிய அளவில், அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் மார்ச் 8 ஆம் தேதி வெளியானது.

காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமான "பிண்டு கி பாப்பி" கவர்ச்சிமிகு இளைஞனான பிண்டு வாழ்வில் ஏற்படும் காதல் மற்றும் எதிர்பாராத திருப்பங்களைச் சொல்கிறது. அவன் ஒரு உற்சாகமான இளம் பெண்ணைச் சந்திக்கையில், அவன் வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்படுகிறது. ஒரு முழுமையான என்டர்டெயினராக அனைத்து அம்சங்களுடன் கூடிய காமெடிப் படமாக, இப்படம் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும்.

தயாரிப்பாளர் விதி ஆச்சார்யா கூறியதாவது.., "பிண்டு கி பாப்பி" படத்தை உருவாக்கியதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இது ஒரு அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினரை ஒன்றிணைத்து உருவான திரைப்படம், மேலும் நாங்கள் உருவாக்கிய மாயாஜாலத்தை திரையில் பார்வையாளர்கள் அனுபவிப்பதைக் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்." என்றார்.

இத்திரைப்படத்தில் சுஷாந்த், ஜான்யா ஜோஷி மற்றும் விதி, விஜய் ராஸ், முரளி ஷர்மா, சுனில் பால், அலி அஸ்கர், அஜய் ஜாதவ், பூஜா பானர்ஜி, அதிதி சன்வால், ரியா எஸ். சோனி, ஊர்வசி சௌஹான், பியூமோரி மேதா தாஸ், முக்ஷ்வர் மேத்தா தாஸ் மற்றும் கணேஷ் ஆச்சார்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

விதி ஆச்சார்யா (V2S Production) தயாரிப்பில், ஷிவ் ஹரே எழுதி இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், மார்ச் 21, 2025 அன்று பிரமாண்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE