20.8 C
New York
Wednesday, April 30, 2025

Buy now

spot_img

The 3rd Single “Semmannu Thane” Cultural song From Agathiya was Released

“அகத்தியா” படத்தின் 3 வது சிங்கிள் “செம்மண்ணு தானே” கல்ச்சுரல் பாடல் வெளியானது. !!
 
பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் ஃபேன்டஸி-ஹாரர்- திரில்லர் படமான “அகத்தியா” படத்தின் மூன்றாவது சிங்கிள், “செம்மண்ணு தானே”, பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. புகழ்மிகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் பாடல், நம் மண்ணின் கலாச்சாரம் மற்றும் மருத்துவ செழுமையைக் கொண்டாடும் தலைசிறந்த படைப்பாக, ரசிகர்களையும், விமர்சகர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. பாடலின் ஆழமான வேரூன்றிய கருப்பொருள்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன், இந்தப் பாடல் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான “அகத்தியா” படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. பான்-இந்திய பிரம்மாண்ட படைப்பான “அகத்தியா” படம், பிப்ரவரி 28, 2025 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியிடப்படுகிறது.

“செம்மண்ணு தானே” என்பது வெறும் மெல்லிசை பாடல் மட்டும் அல்ல; இது நமது நிலத்தின் பாரம்பரியத்திற்கான ஒரு ஆத்மார்த்தமான பயணம். எண்ணற்ற நோய்களைக் குணப்படுத்த மண்ணிலிருந்து மூலிகைகள் மற்றும் இயற்கை வளங்களைப் பயன்படுத்திய முனிவர்கள் மற்றும் இயற்கை மருத்துவர்களின் நம்பமுடியாத பங்களிப்பை இந்தப் பாடல் அழகாக சித்தரிக்கிறது - அவற்றில் சிலவற்றை நவீன மருத்துவம் இன்னுமே தீர்க்கப் போராடுகிறது. யுவனின் அற்புதமான இசையில், நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உணர்வுப்பூர்வமான மெல்லிசையாக இப்பாடல் நம் மனதை ஆட்கொள்கிறது.

தீபக் குமார் பதியின் அசத்தலான ஒளிப்பதிவு பாடலின் தரத்தை உயர்த்துகிறது, இப்பாடல் கேட்க மட்டுமல்ல, காட்சி விருந்தாகவும் அமைந்துள்ளது. படத்தின் கதையுடன் கலாச்சார அம்சங்களைத் தடையின்றி கலந்திருக்கும், பா.விஜய் எழுதியுள்ள இதயப்பூர்வமான வரிகளால், பாடலின் சாராம்சம் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது.

 
இயக்குநர் பா விஜய் கூறியதாவது…
இந்தப் பாடல் வெறும் இசையல்ல, இது நமது நிலத்தின் ஆழமான வேரூன்றிய கலாச்சார பாரம்பரியத்தின் வழியாக ஒரு பயணம். எண்ணற்ற நோய்களைக் குணப்படுத்தும் அபாரமான மருத்துவ மூலிகைகளை நமக்குத் தந்த, நம் மண்ணின் சாரத்தை வெளிப்படுத்த விரும்பினேன். இது குறித்து நான் யுவனுடன் பகிர்ந்து கொண்டேன், அவர் அதை கமர்ஷியலாகவும், கலாச்சார ரீதியாகவும் குறிப்பிடத்தக்க ஒரு மெல்லிசையாக உருவாக்கித் தந்தார். நமது மண்ணின் ஆற்றலால் மனித குலத்திற்குப் பங்காற்றிய ஞானிகளுக்கும், குணப்படுத்துபவர்களுக்கும் இப்பாடல் காணிக்கையாகும்.

“பா.விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதுமே மிக இனிமையான அனுபவம். நம் மண்ணின் அசாத்தியமான மருத்துவ மற்றும் பண்பாட்டு மதிப்பைப் பற்றிய கதைகளை அவர் பகிர்ந்துகொண்டபோது, எனக்கு ஆழ்ந்த பொறுப்புணர்ச்சி ஏற்பட்டது. ‘செம்மண்ணு தானே’ தடைகளைத் தாண்டிய, ஒரு மெல்லிசை. நம் முன்னோர்களின் ஆத்மா மற்றும் அவர்களின் பங்களிப்புகளால் வழிநடத்தப்படுவது போல், இந்த இசை சிரமமின்றி மிக எளிமையாக வந்தது. இது எனது சிறந்த இசையமைப்பில் ஒன்று என்று நான் நம்புகிறேன், பார்வையாளர்கள் இப்பாடலைக் காண பெரும் ஆவலுடன் உள்ளேன்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் கூறியதாவது…

“அகத்தியா மிக முக்கியமான லட்சிய திரைப்படம், இந்தப் படத்தின் ஒவ்வொரு அம்சமும் உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை அளிக்கும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘செம்மண்ணு தானே’ இந்தத் திரைப்படத்தின் மையம், கதையின் கலாச்சார சாரத்தை அழகாகப் பொதித்து வைத்திருக்கும் பாடல். தனிப்பட்ட முறையில், இந்தப் பாடல் நம் மண்ணின் அபாரமான பங்களிப்பை எடுத்துரைப்பதோடு, எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றிய குணப்படுத்துபவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். நமக்கு பலவற்றைக் கொடுத்த மண்ணுக்கு இப்பாடல் சமர்ப்பணம்.”

 வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வாமிண்டியா (வைட் ஆங்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட்) இணைந்து தயாரித்துள்ள “அகத்தியா” திரைப்படம் இதுவரையில்லாத வகையிலான புதுமையான சினிமா அனுபவத்தை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பா.விஜய் இயக்கத்தில் இப்படம், கற்பனை, திகில் மற்றும் மாயங்கள் கலந்து, தேவதைகள் மற்றும் பிசாசுகளின் போரில் பார்வையாளர்களை மயக்கும் பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

டீசர் மற்றும் முந்தைய சிங்கிள்கள் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பைப் ஏற்படுத்தியுள்ளது, தற்போது "செம்மண்ணு தானே" பாடல் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 28 ஆம் தேதி திரையில் அகத்தியா படத்தை கண்டுகளியுங்கள் !!

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE