17.8 C
New York
Wednesday, May 14, 2025

Buy now

spot_img

“Tharunam” is the second film directed by Tejavu director Arvind Srinivasan

ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் புகழ் பெருமையுடன் வழங்கும் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் 'தருணம்' திரைப்படம் இனிதே துவங்கியது !!

தேஜாவு இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் தருணம் !!

கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் இணையும் காதல் திரைப்படம் தருணம் !!

ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் 'தருணம்' திரைப்படம் இன்று படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது. இப்படத்தினை ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணை தயாரிப்பு செய்கிறது.

திரு அருண் பாலாஜி  பேசியதாவது…
அரவிந்த் ஶ்ரீநிவாசன் என்னுடைய நெருங்கிய நண்பர். இன்றைய இயக்குநர்களில் மிகத்திறமையான இளம் இயக்குநர். தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநர். நல்ல படத்தை தருவார். இந்த திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்

தயாரிப்பாளர் விஜய் பாண்டி பேசியதாவது..
இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் எப்போதும் செலவு வைக்க மாட்டார். தயாரிப்பாளருக்கான இயக்குநர். இந்தப்படத்தைக் கண்டிப்பாகச் சிக்கனமான பட்ஜெட்டில் நல்ல படைப்பாக எடுப்பார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் டில்லிபாபு பேசியதாவது…
ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. அரவிந்த் ஶ்ரீநிவாசன் முதல் படமே மிக நன்றாக இயக்கியிருந்தார். மிகப்பெரிய இடத்திற்கு செல்வார். நிறைய புது தயாரிப்பாளர்கள் வருகிறார்கள். நிறைய உதவி இயக்குநர்கள் கதைகளோடு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தயாரிப்பாளர் புகழ் வெற்றி பெற வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இயக்குநர்  கணேஷ் விநாயக் பேசியதாவது..
தேஜாவு படத்திலேயே மிகத்திறமையான திரைக்கதையுடன் அசத்தியவர் அரவிந்த் ஶ்ரீநிவாசன். இந்தப்படத்திலும் கண்டிப்பாக அசத்துவார். தயாரிப்பாளர் நிறையப் படங்கள் தயாரிக்க வேண்டும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் கோபி பேசியதாவது…
அரவிந்த் ஶ்ரீநிவாசன் எனக்கு பி ஆர் ஓ டீம் மூலம் தான் தெரியும். அந்தப்படம் பார்த்த பின் அவரை சந்தித்தேன். இந்தப்படத்தில் தயாரிப்பு செலவைக் குறைத்து நல்லதொரு வெற்றிப்படைப்பை தருவார்கள் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

எடிட்டர் அருள் இ சித்தார்த் பேசியதாவது..
என்னைப் புதுமுகம் என்ற தயக்கமும் இல்லாமல் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் எனக்கு தேஜாவு படத்தில் வாய்ப்பு தந்தார். இந்தப்படம் பற்றிச் சொன்னபோது சம்பளமே பேச வேண்டாம் நான் செய்கிறேன் என்றேன். கிஷனுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என் மனைவி அவரின் ரசிகை. இந்தப் படம் செய்வது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி பேசியதாவது…
இந்தப்படம் படப்பிடிப்பிற்காக ஆவலுடன் உள்ளேன்.  இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுடன் ரொம்ப காலமாக வேலை செய்வதற்காகப் பேசிக்கொண்டிருந்தோம். கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் உடன் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வாய்ப்பிற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் நன்றி

நடிகை ஸ்மிருதி வெங்கட் பேசியதாவது..,
எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு நன்றி. இந்தப்படத்தில் இதுவரை செய்யாத கதாப்பாத்திரம். முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இந்தப்படம் பெரிய வெற்றிபெறும் என நம்புகிறேன் அனைவருக்கும் நன்றி.

நடிகர் கிஷன் தாஸ் பேசியதாவது..,
நான் இன்னும் புதுமுகம் தான். இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் கதை சொல்லும்போதே முதலிலிருந்தே இந்தப்படத்தைப் பெரிய படமாக ட்ரீட் செய்யலாம் என்றார். இப்போதே மோஷன் போஸ்டர், புரமோ வீடியோவுடன் ஆரம்பித்துள்ளோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் திரைத்துறையில் இருப்பதற்குக் காரணமே தர்புகா சிவாதான், அவருக்கு என் நன்றி. அவர் இந்தப்படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சி. கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையும் நன்றி.

தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது…
அரவிந்த் ஶ்ரீநிவாசனுடன் என் நட்பு 18 வருடங்களுக்கு மேலானது. ஒரு நல்ல படைப்பைத் தரவே நாங்கள் உழைக்கிறோம். அரவிந்த் ஶ்ரீநிவாசன்  என் நண்பர் என்பதால் எனக்காக இன்னும் கடினமாக உழைக்கிறார். அவர் மணிரத்னம், கௌதம் மாதிரி படம் பண்ண வேண்டும் என்று சொல்வார். இந்தப்படம் அந்த கனவை நனவாக்கும். மிக நல்ல படக்குழு எங்களுக்கு அமைந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன்  பேசியதாவது..,
இன்று காலையில் எங்கள் படத்திற்காக வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. புகழ் 18 வருடங்களாக நெருங்கிய நண்பர். பல காலம் நாங்கள் படம் செய்யப் பேசிக்கொண்டிருந்தோம், எனக்காக என்னை நம்பி எல்லாம் செய்வார். அவருக்கு இது வெற்றிப்படமாக அமையும். கிஷன், ஸ்மிருதி வெங்கட் புதுசான இளமையான ஜோடி, தர்புகா சிவா இசையமைக்கிறார். அவரிடம் நான்கு ஹிட் பாடல்கள் கேட்டிருக்கிறேன். கண்டிப்பாக பண்ணிடலாம் என்றார்.  என் தேஜாவு பட எடிட்டர் இந்தப்படத்திலும் பணியாற்றுகிறார். தேஜாவுவை தாண்டி ஒரு நல்ல படைப்பைத் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் நன்றி. தேஜாவு படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நல்ல மிஸ்டரி திரில்லர் பண்ணக்கூடாது என்பதில் நிச்சயமாக இருந்தேன். பல கதைகள் பேசினோம். இந்தக்கதைக்காக 2 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். தயாரிப்பாளர் புகழ் என்னை எதுவுமே கேட்கவில்லை. மிக ஆதரவாக இருந்தார். இது கண்டிப்பாக அனைவருக்கும் மைல்கல் படமாக இருக்கும்.

நடிகர்கள்

கிஷன் தாஸ்
ஸ்மிருதி வெங்கட்
தொழில் நுட்ப கலைஞர்கள்

எழுத்து, இயக்கம் - அரவிந்த் ஶ்ரீநிவாசன்
ஒளிப்பதிவாளர் - ராஜா பட்டாசார்ஜி
இசை - தர்புகா சிவா
படத்தொகுப்பு - அருள் இ சித்தார்த்
கலை இயக்குனர் - வர்ணாலயா ஜெகதீசன்
மக்கள் தொடர்பு - சதிஷ், சதிஷ் குமார், சிவா (AIM)
சண்டைப்பயிற்சி - Stunner சாம்
தயாரிப்பாளர் - புகழ் A, ஈடன் (ழென் ஸ்டுடியோஸ்)
இணை தயாரிப்பு - ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE