யானை’ டைட்டிலுடன் இணையும் சூர்யா - ஹரி கூட்டணி
சூர்யாவின் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்தப் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா செல்வராகவனின் என்.ஜி. கே மற்றும் கே.வி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இன்னிலையில் முன்பே அறிவித்தபடி ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.வேல், சிங்கம் படங்களை தொடர்ந்து சூர்யா - ஹரி கூட்டணி தனது 6வது படமாக யானை என பெயர் வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளனர். சூர்யா - ஹரி கூட்டணி என்றாலே ஆக்ஷன் கலந்த கதையாகத்தான் இருக்கும். அதன்படி இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.