லிங்குசாமிக்கு ரஜினி செய்த உதவி!
தனக்கு ரஜினி பெரிய உதவி செய்ததாக லிங்குசாமி ஒரு படவிழாவில் குறிப்பிட்டார். இதுபற்றிய விவரம் வருமாறு.
விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசும்போது ”
ரஜினி முருகன் படத்தின் கதை திரையரங்க மூடில் ஜாலியாக இருந்தது. வாழ்க்கையில் நிறைய உத்தம் வில்லன்கள் வருவார்கள். நீங்கள் இதே மனசோட இருங்கள் என்று பொன் பொன்ராமைக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு எவ்வளவோ பிரச்சினை இருக்கலாம். எல்லாவற்றையும் சந்தித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன்.
காலையில் மெரினா பீச் போனேன். ரஜினி முருகன் பற்றி எந்த நினைப்பும் இல்லாமல்தான் போனேன். வழியில் தென்பட்ட ‘ரஜினிமுருகன்’ போஸ்டர்கள் பெரிய தெம்பாக புத்துணர்ச்சியாக இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு கஷ்டம் இருப்பது எல்லாம் ஒரு விஷயமே கிடையாது எனத்தோன்றியது.
என் படம் ‘ரன்’ படப்பிடிப்பு சமயம் ரஜினி சாரின் ‘பாபா’வும் நடந்தது முதன்முதலில் அப்போதுதான் எடிட்டிங்கில் ரஜினி சாரைப் பார்த்தேன். அப்போது ‘ரன்’ போஸ்டர்களை பார்த்து இருக்கிறார். ‘செம எனர்ஜியாக இருக்கிறது’ என்று கூறினார்.
‘ரஜினி முருகன்’ தலைப்பு பற்றி யோசித்தேன். ரஜினிகாந்த்என்று ரஜினி சார் பெயரில் தலைப்புக்கு அவர் அனுமதிக்க வில்லை. சிவாஜி என்கிற தலைப்புக்கு ஷங்கர்சார் சிவாஜி குடும்பத்தில் அனுமதி வாங்கினார். ‘ரஜினி முருகன்’ தலைப்பு சம்பந்தமாக ரஜினிசாரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்ட போது ரஜினி சார் போனில் வந்தார். நான் சொன்னேன் இந்த தலைப்பு பொன்ராமின் குரு ராஜேஷ் இயக்கிய ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் வரும் ஒரு பாத்திரம். எதிர்மறையாக எதுவும் பயன்படுத்த வில்லை என்று விரிவாகப் பேச ஆரம்பித்தேன் போதும் போதும் என்று என்னைப் பேசவே விடவில்லை. போனிலேயே ஓகே சொல்லி விட்டடார் .இது மிகப்பெரிய உதவி. அவருக்கு மிகப்பெரிய மனசு. அது மட்டுமல்ல ஏற்கெனவே தலைப்பு பற்றிய வழக்கு ஏதோ இருக்கு. சௌந்தர்யா கிட்டே கேட்டு க்ளியர் பண்ணிக் குங்க என்றும் சொன்னார்.
எனக்காக இந்த தலைப்பை விட்டுக் கொடுத்த ரஜினிசாருக்கு பெரிய நன்றி