25.2 C
New York
Sunday, May 26, 2024

Buy now

Sivakarthikeyan Launches 2nd Single ‘Kannaadi Kannaadi’ From “Hi Nanna”

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ‘hi நான்னா’ திரைப்படத்தின் இரண்டாம் பாடலான ‘கண்ணாடி கண்ணாடி’-யை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்

நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படமான ‘hi நான்னா’ ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மீதுள்ள ஆர்வத்தை இந்த கண்கவர் ஜோடி அதிகப்படுத்தியுள்ள போதிலும், ‘hi நான்னா’ ஒரு வழக்கமான காதல் கதை அல்ல.

அப்பா-மகளின் அழகான, உணர்ச்சிகரமான பயணத்தை ‘hi நான்னா’ சித்தரிக்கும். ஷௌர்யுவ் இயக்குநராக அறிமுகமாகும் இத்திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிக்கின்றனர். நானியின் மகளாக கியாரா கண்ணா நடிக்கிறார்.

முதல் பாடலான ‘நிழலியே’ நானி மற்றும் மிருணால் தாக்கூர் ஜோடிக்கு இடையேயான அருமையான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தி ‘hi நான்னா’ திரைப்படத்தின் இனிமையான இசைப் பயணத்தை தொடங்கி வைத்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டின் ஒரு பகுதியாக, இரண்டாம் பாடலான ‘கண்ணாடி கண்ணாடி’-யை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டார்.

“அப்பா-மகள் உறவு என்பது தெய்வீகமானது. நானி நடிக்கும் ‘hi நான்னா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘கண்ணாடி கண்ணாடி’ பாடல் அனைத்து தந்தைகள் மற்றும் மகள்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்,” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தனி ஒருவனாக மகளை அன்புடன் வளர்க்கும் தந்தை மற்றும் அந்த குழந்தைக்கு இடையேயான பந்தத்தை இந்த பாடல் மிகவும் அழகாக வெளிப்படுத்துகிறது. மதன் கார்க்கியின் வரிகள் மனதை தொடுகின்றன. இப்பாடலுக்கு உணர்ச்சித் ததும்ப இசையமைத்துள்ள ஹேஷாம் அப்துல் வஹாப், அதை மிகவும் உயிரோட்டத்துடன் பாடியுள்ளார்.

வயலின், புல்லாங்குழல், பாஸ் கிதார் உன்கிட்ட இசைக்கருவிகள் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு ஆத்மார்த்தமான பாடலுக்கு வலு சேர்த்துள்ளன. நானி மற்றும் கியாரா கண்ணாவுக்கு இடையேயான அழகான புரிதல் இந்த பாடலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

முழு நீள குடும்ப படமான ‘hi நான்னா’, சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில், பிரவீன் அந்தோணியின் படத்தொகுப்பில் உருவாகிறது. அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்புக்கு பொறுப்பேற்றுள்ளார். சதீஷ் ஈ வி வி நிர்வாக தயாரிப்பாளர் ஆவார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான் இந்தியா திரைப்படமாக இந்த ஆண்டு டிசம்பர் 21 அன்று ‘hi நான்னா’ வெளியாகிறது.

படக்குழுவினர்:

நடிகர்கள்: நானி, மிருணால் தாக்கூர், பேபி கியாரா கண்ணா

இயக்கம்: ஷௌர்யுவ்
தயாரிப்பு: மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா
தயாரிப்பு நிறுவனம்: வைரா என்டர்டெயின்மென்ட்ஸ்
ஒளிப்பதிவு: சானு ஜான் வர்கீஸ்
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
தயாரிப்பு வடிவமைப்பு: அவினாஷ் கொல்லா
படத்தொகுப்பு: பிரவீன் அந்தோணி
நிர்வாகத் தயாரிப்பாளர் – சதீஷ் ஈ.வி.வி
ஆடை வடிவமைப்பாளர்: ஷீத்தல் ஷர்மா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்


Sivakarthikeyan Launches 2nd Single ‘Kannaadi Kannaadi’ From Natural Star Nani, Shouryuv, Vyra Entertainments ‘Hi Nanna’

The first-time pairing of Natural Star Nani and the gorgeous Mrunal Thakur in the upcoming Pan India film ‘Hi Nanna’ looked fresh and beautiful on screen. However, ‘Hi Nanna’ is not a typical love story. The movie will depict a lovely, yet emotive journey of father-daughter. Baby Kiara Khanna played Nani’s daughter in this Shouryuv debut directorial produced grandly by Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala on Vyra Entertainments.

As part of musical promotions, the makers released the film’s second single- ‘Kannaadi Kannaadi’. Sivakarthikeyan did the honours of launching the song. “Father – daughter bond is always ethereal ❤️❤️ This song #KannaadiKannaadi from
@NameIsNani
‘s #HiNanna wil be special to all fathers and daughters 👌👌❤️❤️🤗🤗,” wrote Sivakarthikeyan.

‘Kannaadi Kannaadi’ establishes a cute love shared by a father and his dear little girl. However, this song is not about how flawlessly the dad manages to get his little girl ready, but about his emotional attachment with her, being a single parent.

Hesham Abdul Wahab has landed the right notes for the perfect tune for a song this unique and standalone. He has also added emotions to the number, in his own voice. The song flows on violin, flute, acoustic, and bass guitars, making it one of the best soulful numbers in recent times. Madhan Karky depicted the adoration of the father for his daughter with some beautiful lines. Nani and Kiara Khanna’s lovely chemistry beautified the visuals. ‘Kannaadi Kannaadi’ becomes an instant hit for its superb composition, singing, lyrics, and visuals.

The wholesome family entertainer has Sanu John Varughese ISC cranking the camera, while Praveen Anthony is the editor and Avinash Kolla is the production designer. Satish EVV is the executive producer.

‘Hi Nanna’ is scheduled for release in Tamil, Telugu, Kannada, Malayalam, and Hindi languages on December 21, this year.

Cast: Nani, Mrunal Thakur, Baby Kiara Khanna

Technical Crew:
Director: Shouryuv
Producers: Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala
Banner: Vyra Entertainments
DOP: Sanu John Varughese ISC
Music Director: Hesham Abdul Wahab
Production Designer: Avinash Kolla
Editor: Praveen Anthony
Executive Producer – Satish EVV
Costume Designer: Sheetal Sharma
PRO: Nikil Murukan

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE