காதல் கதைகள் பல வித கோணங் களில் வெளியாகியிருக்கிறது. சீதா ராமம் பெயருக்கு ஏற்றதுபோல் ஒரு மாறுபட்ட காதல் கதைதான். துல்கர் சல்மான், மிருணால் தாகூர் மறக்கமுடியாத காதல் ஜோடிகளாக பதிந்துவிடுகின்றனர்.ராணுவ லெப்டினன்ட்டாக துல்கர் சல்மான் ஒரு மாறுபட்ட நடிப்பையும், ராமாக காதல் மன்னனாகவும் வாழ்ந்திருக்கிறார்.துல்கர் சல்மான் என்ன ஒரு அற்புதமான நடிகர் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சீதா ராமம் படத்தின் மூலம் நடிகர் மீண்டும் தனது தகுதியை நிரூபித்துள்ளார். அவர் லெப்டினன்ட் ராமின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார். அவர் அழகாக இருக்கிறார் மற்றும் அவரது திரை பிரசன்ஸ் ஒளிரும். உணர்வுப்பூர்வமான காட்சிகளாக இருந்தாலும் சரி, காதல் காட்சிகளாக இருந்தாலும் சரி, அவற்றை அவர் அற்புதமாக வழங்குகிறார்.
யாருமே இல்லை என்கிறாரே, நாம் இவரை காதல் கணவராக பாவித்து கடிதங்கள் எழுதுவோமே என்று தான் ஆரம்பிக்கிறார் மிருணாள். அந்த காதலில் துல்கர் உருகுவதை விட , பின்னர் இவரே உருகிப்போகிறார், அழகோ அழகு. மிருணால், சீதா மகாலட்சுமியாக ஒவ்வொருவர் நினைவிலும் நீங்காத இடம்பிடிப்பார்.
வழக்கம் போக, ராஷ்மிகா மந்தனா மிகவும் ஸ்டைல் மற்றும் லேசான திமிரை எப்பொழுதும் கொப்பளித்து கொண்டிருக்கும் முகபாவனையுடன் வசீகரிக்கிறார். அஃரினா என்கிற பெயருடன் இந்தியா என்றாலே – இந்துக்கள் என்றாலே – அட இந்துப்பெயர்கள் என்றாலே அப்படி ஒரு வெறுப்புடன் இந்திய பேராசிரியரிடமே லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். இந்தியக்கொடியை எரிக்க வேண்டும் என்கிற வெறியில், பேராசிரியரின் காரையே தீக்கிரையாக்க, அதற்கு நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்கிற நிலையில், எதிர்பாராத விதமாக ராமின் கடிதத்தை எடுத்துக்கொண்டு சீதாமகாலட்சுமியை தேடி இந்தியாவிற்கு வரவேண்டியதாகிவிடுகிறது. ஒரு சாதாரண assignment ஆக கடிதத்தை எடுத்துக்கொண்டு கிளம்புபவருக்கு ஆச்சிரியங்களும் அதிசயங்களும் மனமாற்றங்களும் ஏற்படுகின்றன. அவரது பிரமிப்பு படம் பார்க்கும் ரசிகர்கள் வாயிலாக எதிரொலிக்கிறது.கற்பனை எல்லாவற்றையும் காட்சிகளாகவும் , சுவையான திரைக்கதையாகவும் திரட்டி தந்திருக்கும் இயக்குனர் அனுராகபுடி கிளைமாக்ஸ் முடியும்போது அரங்கில் கைதட்டல் பெறுகிறார். நூர்ஜ ஹானை சீதா மகாலட்சுமியாக மாற்றியதற்காகவும் இயக்குனரை பாராட்டலாம்.