சினம் ஒரு போலீஸ் கதையம்சம் கொண்ட படம் என்று சொல்ல முடியாது இது ஒரு அம்சமான குடும்பத்தை என்றும் சொல்லமுடியாது அப்பா என்ன என்று கேள்வி கேட்கிரிகளா இது ஒரு சமூக கதையம்சம் கொண்ட படம் என்றும் சொல்லலாம். அதோடு போலீஸ் கதையும் உண்டு அருமையான மனதை வருடும் குடும்பத்தையும் உண்டு.சென்னையின் புறநகர் பகுதியான ரெட்ஹில்ஸ் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார் அருண் விஜய். கடமை தவறாமல் நடக்க நினைக்கும் அருண் விஜய்யின் இந்த நல்ல குணத்தை அவ்வப்போது கிண்டலடிக்கிறார் அதே காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர். ஷேர் ஆட்டோவில் பயணமாகும் பல்லக் லால்வானி, 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். கொலையும் செய்யப்படுகிறார். அவரது உடலுக்கு அருகே ஒரு ஆணின் உடலும் இருப்பதால், அந்த வழக்கை கள்ளக் காதல் என கூறி அவரை அருண் விஜய்யின் உயரதிகாரி களங்கப்படுத்துகிறார்.அருண் மனைவி மீது அபாண்ட மாக இன்ஸ்பெக்டர் சித்து சங்கர் பழிபோடுவதும் அதுபற்றி விசாரிக்கும் சாக்கில் அருண் விஜய்யை நக்கலாக பேசி வில்லத்தனத்தை வெளிப்படுத்து கிறார். அடுத்தநிமிடம் அருண் விஜய்யிடம் சித்து அடிவாங்கி கை ஒடிந்து அலறுவது செம சீன்.படத்தில் எங்கு திரும்பினாலும் அருண் விஜய்யின் ஆக்ரோஷம் தான் கண்முன் நிற்கிறது. மனைவியை வெறிநாய் போல் கடித்து குதறியவர்களை சினத்தின் உச்சத்துக்கு சென்று அடித்து கொலை செய்வது அரங்கை அப்ளாஸால் நிரப்பு கிறது.அறிமுகநாயகி பாலக் லால்வனி தன் முதல் படத்திலே தன் சிறப்பான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார்.படத்தின் அடுத்த பலம் இசையமைப்பாளர் ஷபீர் அருமையான பாடல்கள் கதைக்கு ஏற்ப பின்னணி இசை என்று இயக்குனருக்கு பலமாக இருக்கிறார். நிச்சயம் தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு சிறந்த இசையமைப்பாளராக வளம் வருவார்.ஏட்டையாக வரும் காளி வெங்கட் தனி கவனம் பெறுகிறார். யார் வில்லன் என்பது சஸ்பென்ஸ்.கோபிநாத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
அதிரடியான போலீஸ் படமாக இல்லாமல், செண்டிமெண்ட் படமாக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் குமரவேலன்
