தன் மனம் கவர்ந்த த்ரிஷாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கலாம் என சிம்பு எதிர்பார்த்தார். மீண்டும் ஒரு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ அளவிற்கு அந்த ஜோடி ராசியுடன் களம் இறங்கலாம் என எதிர்பார்த்தார்.
ஆனால், அதற்குள் விதி விளையாடி த்ரிஷாவை அந்தப் படத்திலிருந்தே விலகிப் போக வைத்து விட்டது. இருந்தாலும் சிம்புவுக்கு ஒரு புது ஜோடி கிடைக்கும் அதிர்ஷ்டத்தை யாரால் தடுக்க முடியும்.
‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த கேரள அழகி கேத்தரின் தெரேசா இப்போது சிம்பு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
தமிழில் இதுவரை ஒரே படத்தில் மட்டுமே நடித்துள்ள கேத்தரின் அடுத்து சரியான வாய்ப்பு கிடைப்பதற்காகக் காத்திருந்தார். இப்போது செல்வராகவன் இயக்கும் இந்தப் புதிய படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் உடனே சம்மதம் சொல்லி விட்டாராம்.
சிம்பு – கேத்தரின் ஜோடிப் பொருத்தமும் நன்றாகத்தான் இருக்கும்…