இயக்குனர் செல்லா அய்யாவு இந்த படம் மூலம் அறிமுகமாகிறார் இவர் இயக்குனர் எழில் உதவி இயக்குனர் தன் குருநாதர் போலவேகாமெடியை காலமாக எடுத்து கொண்டார் அதை திறம் பட செய்துள்ளார் படத்தில் அவர் லாஜிக் விட காமெடி மேஜிக்கை நம்பி அதை மிக சிறப்பாக செய்துள்ளார் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை காமெடி தான் மனதில் எத்தனை கவலை இருந்தாலும் அதை மறக்க வைக்கும் அளவுக்கு சிரிக்க வைக்குறார்
இந்த விஷ்ணுவிஷால்,ரெஜினாகாசான்றா,ஓவியா,யோகிபாபு,கருணாகரன்,இயக்குனர் மாரிமுத்து,ரவி சங்கர்,லிவிங்ஸ்டன்,ஆனந்தராஜ்,மன்சூரலிகான், மற்றும் பலர் நடிப்பில் லியோன் ஜேம்ஸ் இசையில் லக்ஷ்மண் ஒளிப்பதிவில் வெளிவந்து இருக்கும் படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.
இயக்குனர் படத்தின் கதை எல்லாம் பெருசாக இல்லை காமெடி ஒன்று தான் பிராதனம் படத்தின் மிக பெரிய பலம் என்றால் அது யோகிபாபு தான் படத்துக்கு சிலுக்குவார்பட்டி சிங்கம் என்பதுக்கு பதில் சிலுக்குவார்பட்டி யோகிபாபு என்று டைட்டில் வைத்து இருக்கலாம் ஐயோ அந்த அளவுக்கு நம்ம்மை சிரிக்கவைக்கிறார் யோகிபாபு
சிலுக்குவார்பட்டி போலீஸ் ஸ்டேசன்யில் போலிஸ் கான்ஸ்டபிள் விஷ்ணு விஷால் எஸ்,ஐ லிவிங்ஸ்டன் விஷ்ணு விஷால் என்ன செய்தாலும் சரி என்று சொல்லும் அதிகாரி இந்த சூழ்நிலையில் சென்னையை உலுக்கும் மிக பெரிய ரவுடி சைக்கிள் சங்கர் இவர்பட்டபகளில் துணை கமிஷனரை கொலை செய்கிறார் இவரை என்கவுண்டர் பண்ண போலீஸ் திட்டம் போடுகிறார்கள் அந்த சூழ்நிலையில் இவர் தலைமறைவாகிறார் இந்த சூழ்நிலையில் அரசியலில் சிறு பிரச்னை காரணமாக மந்திரி அவரின் கட்சி ஆளை கொலை செய்ய சொல்ல்கிறார் சைக்கிள் ஷங்கரிடம் இந்த கொலையை நீ செய் உன்னை நான் காப்பாற்றுகிறேன் என்று சொல்ல சைக்கிள் சங்கர் உடனே அந்த கட்சி ஆளை கொலை செய்ய சிலுக்குவாற்பட்டிக்கு செல்கிறார்
இந்த சூழ்நிலையில் விஷ்ணுவிஷால் முறைமாமன் பொண்ணு ரெஜினா கசன்றா சைக்கிள் சங்கரை கைது செய்தால் தான் உனக்கும் எனக்கும் கல்யாணம் என்று சொல்ல வரலாறுஇஷ்னு விஷால் நிமால் முடியாததை செய்ய சொல்லுகிறாள் என்ன செய்வது என்று முழிக்கிறார் ஆனால் ரெஜினா அவனை பிடித்தால் தான் திருமணம் என்று சொல்ல என்ன நடந்தது என்பது தான் மீதி கதை.
விஷ்ணு விஷால் தன் பலம் அறிந்து இந்த படத்தின் கதையை புரிந்து நடித்துள்ளார் அப்பாவி போலிசாக இல்லை கோழை போலிசாக இல்லை வாய் உதார் போலிஸ் பாத்திரம் அதை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்.இயக்குனரின் நடிகராக சிறப்பாக நடித்துள்ளார்.
ரெஜினா கசன்றா பெரிதாக ஒண்ணும் இல்லை அழுகு பதுமை போல வந்து போகிறார் ஆனால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார் அழகில் சொக்கவைக்கிறார்.
ஆட்டக்காரி கனகா தான் ஓவியா அயிட்டம் டான்சராக வருகிறார் குறைந்த நேரம் வந்தாலும் மனநிறைவாக நடித்துள்ளார் என்று சொன்னால் பொய் ரசிகர்களி எதிஎற்பர்ப்புக்கு இல்லை என்று தான் சொல்லணும்
படத்தின் பலமே யோகிபாபு தான் காரணம் அந்த அளவுக்கு நம்மை சிரிக்கவைக்கிறார் காட்சிக்கு காட்சி நம்மை கவ்ருகிறார் படம் முழுக்க வருகிறார். படத்தை மிக முக்கிய பங்கு என்று தான் சொல்லணும் அந்த அளவுக்கு பலம் சேர்க்கிறார்.
ஒருபக்கம் ஆனந்தராஜ் வில்லதனதுடன் காமெடி செய்துள்ளார் வில்லன் நடிகர் ரவி சங்கர் இவர் செய்யும் வில்லத்தனத்தில் ஒரு நகைசுவை அடங்கியுள்ளது இதற்கும் இயக்குனரை பாராட்ட வேண்டும் மற்றபடி படத்தில் அனைவரும் தனக்கு கொடுத்த பங்கை மிகவும் உணர்ந்து நடித்துள்ளனர்.