27.1 C
New York
Friday, July 11, 2025

Buy now

spot_img

Shocking incidents, with exciting twists, “Chinna marumagal”, on your Vijay TV !!*

*மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி ? பரபரக்கும் திருப்பங்களுடன் விஜய் டிவியின் சின்ன மருமகள் நெடுந்தொடர் !!*

*தமிழ்செல்வி தன் கனவை வெல்ல 1 லட்சம் திரட்டுவாளா ? – விஜய் டிவி "சின்ன மருமகள்" தொடரின் நெஞ்சைத் தொடும் கதை!*

*அதிர வைக்கும் சம்பவங்கள், பரபரக்கும் திருப்பங்களுடன், "சின்ன மருமகள்" நெடுந்தொடர், உங்கள் விஜய் டிவியில் !!*

தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் "சின்ன மருமகள்". பெண் ரசிகர்கள் தனித்த வரவேற்பைப் பெற்றுள்ள இத்தொடர், அதிரடி திருப்பங்களுடன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பெண்களை மையப்படுத்திய தமிழ் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்சனைகளை அழுத்தமாக பேசி, பெண் சக்தியின் பெருமையைப் பேசும் சின்ன மருமகள் தொடர், பெண்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அதிலும் கடந்த வாரம், வீட்டை விட்டு வெளியே வந்து, கணவனையும் தகப்பனையும் உதறி, தன் கனவைச் சாதிக்க தமிழ்செல்வி மேற்கொண்ட பயணம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த வார தொடரில், தமிழ்செல்வி மருத்துவராகும் தன் கனவை நிறைவேற்ற, அவளுக்குத் தேவைப்படும் 1 லட்சம் ரூபாயைத் திரட்ட, மொய் விருந்து வைக்கத் திட்டமிடுகிறாள். அவளின் திட்டத்தை உடைக்க சாவித்திரி, கிடா விருந்து வைக்கத் திட்டமிடுகிறாள். சாவித்திரியை எதிர்த்து தமிழ்செல்வி ஜெயிப்பாளா? தன் கனவைச் சாதிக்க 1 லட்சம் அவளால் திரட்ட முடியுமோ? என பரபரப்பு திருப்பங்களுடன், இந்த தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

தமிழ்செல்வி தற்போது ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினராக மாறியுள்ளார். தமிழக மக்கள் அவளை தங்கள் வீட்டுப் பெண்ணாகப் பார்க்கிறார்கள். அவளது கனவு ஜெயிக்குமா ? என ஆவலோடு எதிர்பார்த்து வருகிறார்கள்.

தமிழசெல்வியின் இந்த பரபரப்பான பயணத்தைத் தெரிந்து கொள்ள, இந்தத் தொடரின் புதிய எபிஸோடுகளை, விஜய் டிவியில் ஒவ்வொரு நாளும் 9.30 மணிக்கும் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டு ரசியுங்கள்.

Promo Link 🔗https://youtu.be/4IaU1YnDl6s?si=bDoyRhCAtpSvV55T

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE