19.7 C
New York
Tuesday, October 8, 2024

Buy now

spot_img

SENJITTALE EN KADHALA

தமிழ் சினிமாவில் பேய்கள் காலம் போய் இன்றைய இளம் பெண்கள் அதாவது கல்லூரி பெண்கள் செய்யும் அட்டகாசம் தான் இப்ப ஸ்டைல் என்று கூட சொல்லலாம் தொடர்ந்து இந்த மாதிரியான படங்கள் வருகிறது இப்ப நாம பாக்கபோற படமும் அப்படி தான் இன்றய பெண்கள் பாவப்பட்ட பசங்களை எப்படி மடக்குகிறார்கள் எப்படி அவர்களை அழ வைக்கிறார்கள் என்பதை படம் பிடித்து காட்டும் படம் தான் செஞ்சிட்டாலே என் காதல
இந்த படம் முழுக்க முழுக்க புதுமுகங்களால் எடுக்கப்பட்ட படம் என்றாலும் சில முகங்கள் நாம் டிவியில் பார்த்தவர்கள் தான் இந்த படத்தில் நாயகனாக எழில் துரை மதுமிலா அபிநயா கயல்வின்சென்ட் ராகவ் உமா ஸ்ரீனிவாசன் வனிதா மெட்ராஸ் ரமா மைம் கோபி மகாநதி ஷங்கர் மற்றும் பலர் நடிப்பில் மனிஷ் ஒளிப்பதிவில் ராஜ் பரத் இசையில் எழில் துரை இயக்கி நாயகனாகவும் நடித்துள்ளார் .
நாயகன் எழில் துரை கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கறிஞரான தந்தை அஜய் ரத்னம், தாய், தங்கை என தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் தனது தங்கையின் தோழியான மதுமிலாவை பார்க்கும் நாயகனுக்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. பின்னர் சில நாட்களுக்கு பிறகு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மதுமிலாவை மீண்டும் பார்க்க, அவள் மீதான ஈர்ப்பு காதலாக மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் தனது காதலை அவளிடம் தெரிவிக்க, மதுமிலாவும் சம்மதம் தெரிவிக்கிறாள்.

பின்னர், இருவரும் சந்தோஷமாக காதலித்து வருகின்றனர். நாயகன் எழிலுக்கு வேலை கிடைக்கவில்லை. அன்றாட பிழைப்புக்கு தனது அப்பாவையே நம்பி இருக்கிறான். இந்நிலையில், கல்லூரி தலைமை பொறுப்புக்கு தேர்தல் வர, அதில் மதுமிலாவும் போட்டியிட்டு வெற்றி பெறுகிறாள். இதையடுத்து, அவளுக்கு மற்றொரு நபருடன் தொடர்பு ஏற்படுகிறது. இதனால் எழிலை பிரிய முடிவு செய்து அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். இருப்பினும், அவள் பின்னாலேயே சுற்றிவரும் எழில், ஒரு கட்டத்தில் அவளை பிரிகிறார்
எழில் அவளை பிரிந்த மனவேதனையில் தான் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று முடிவு செய்து புதிய கம்பெனி ஒன்றை தொடங்கி சமுதாயத்தில் பேசும்படியான நிலைக்கு வருகிறார். அவரது கம்பெனியிலேயே பணிபுரியும் மற்றொரு நாயகியான அபிநயா, எழில் மீது காதல் கொண்டு, தனது காதலை எழிலிடம் தெரிவிக்கிறார். அபிநயாவிடம் தனது முதல் காதல் குறித்து தெரிவிக்கும் எழில், அதேநேரத்தில் மதுமிலாவை இன்னமும் காதலிப்பதாகவும் கூறுகிறார்.
மறுபக்கத்தில் எழிலை பிரிந்த மதுமிலா, தனது அடுத்த காதலில் தோல்வியடைந்து, பின்னர் மீண்டும் ஒருவரை காதலிக்க அந்த காதலும் தோல்வியடைகிறது. இந்த நிலையில், மதுமிலாவின் தந்தையான மைம் கோபி, எழிலும், மதுமிலாவும் காதலிப்பதாகக் கூறி எழிலின் பெற்றோரிடம் திருமண பேச்சுவார்த்தை நடத்துகிறார். இறுதியில், எழில் தன்னை வேண்டாமென்று ஒதுக்கிய மதுமிலாவுடன் ஒன்று சேர்ந்தாரா? அல்லது தன்னையே உருக உருக காதலிக்கும் அபிநயாவை திருமணம் செய்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை.
நாயகன் எழில் துரை மிக அருமையாக நடித்துள்ளார். நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார். என்று சொல்லணும் காரணம் படத்தின் இயக்குனரும் அவர்தான் அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார் . நிறைய பெண்களிடம் ஏமாந்து இருப்பார் போல தோணுது அந்த அனுபவம் தான் இந்த படமா என்றும் தோனவைக்கிறது. அதேபோல வசன உச்சரிப்புகள் எல்லாம் மிக சரியான முறையில் பேசி நடித்துள்ளார் .
நடிகை அபிநயாவை பற்றி சொல்ல வேண்டியதில்லை. வாய்பேச முடியாதவர் என்றாலும், எப்போதும் போல தனது எதார்த்தமான நடிப்பால் கலக்கியிருக்கிறார். திரையில் அபிநயா வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ‘கயல்’ வின்சென்ட் காமெடியில் கலக்கி இருக்கிறார். மைம் கோபி, மகாநதி சங்கர் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

படத்தின் இயக்குனராக எழில் துரை மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் அருமையான நட்சத்திர தேர்வு காட்சியமைப்பு வசனங்கள் எல்லாமே அருமை பெண்கள் இன்று பசங்களை எப்படி எல்லாம் அலையைவிடுகிறார்கள் என்று வெளிச்சம் போட்டு காமிகிறார் ஒரு பொண்ணு எத்தனை பாய் பிரண்ட்ஸ் வைகிறார்கள் எப்படி ஒரு பயனை கழட்ட பெண்கள் திட்டம் போடுகிறார்கள் என்று அருமையாக வெளிச்சம் போட்டு காமிக்கிறார் இதற்காகவே அவருக்கு ஒரு சபாஷ் போடலாம் இன்றைய மாணவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம்
மொத்தத்தில் செஞ்சிட்டாலே என் காதல பெண்கள் முகத்திரை

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE