24.1 C
New York
Friday, September 20, 2024

Buy now

spot_img

SANGILI BUNGILI KADHAVA THORAE First look to be unveiled on 3rd & the teaser on 4th of Feb

'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் டீசர் வருகின்ற பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகின்றது

'A for Apple' நிறுவனத்தின் சார்பில் அட்லீ தயாரித்து, 'Fox Star Studios' வழங்க இருக்கும் திரைப்படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. இந்த படத்தின் மூலம் 'நடிகவேல்' எம் ஆர் ராதாவின் பேரனும், இயக்குநர் பிரியதர்ஷனின் உதவியாளருமான ஹைக், தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் கமல்ஹாசனின் 'விஷ்வரூபம்' படத்திலும், அதன் இரண்டாம் பாகத்திலும் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜீவா - ஸ்ரீதிவ்யா - சூரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் முதல் போஸ்டரும், டீசரும் இந்த வாரத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தில் 'டத்தோ' ராதாரவி மற்றும் ராதிகா சரத்குமார் மிக முக்கிய கதாபாத்திரங்களிலும், தம்பி ராமையா, கோவை சரளா, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மயில்சாமி, தேவதர்ஷினி மற்றும் இளவரசு ஆகியோர் ஏனைய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

"அட்லீ தயாரிக்கும் முதல் படத்தில், அவரோடு நாங்கள் கைக் கோர்த்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. ''ராஜா ராணி' வெற்றி கூட்டணிக்கு பிறகு நாங்கள் அட்லீ தயாரிக்கும் முதல் படத்திலும் அவருக்கு பக்கபலமாய் இருப்பதை பெருமையாக கருதுகின்றோம். நாங்களும், அட்லீயும் இணைந்து, பல திறமையான கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் எங்களின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் இயக்குநர் ஹைக்கின் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'Fox Star Studios' நிறுவனத்தின் தலைமை நிர்வாகி விஜய் சிங்.

தற்போது விஜய் படத்தின் படப்பிடிப்பில் மும்மரமாக ஈடுபட்டு வரும் அட்லீ இந்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' பற்றி கூறுகையில், "நான் தயாரிக்கும் முதல் படமான 'சங்கிலி புங்கிலி கதவ தொற', முழுக்க முழுக்க குடும்பங்களை கவரக்கூடிய திரைப்படமாக இருக்கும். என்னை இயக்குநராக அறிமுகப்படுத்திய நிறுவனத்திற்கு ஒரு படத்தை தயாரிக்கிறேன் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கின்றது. அதே சமயத்தில் தமிழ் திரையுலகிற்கு மேலும் ஒரு தரமான இயக்குநரை அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். நிச்சயமாக தரமான கதையம்சங்கள் நிறைந்த திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநராக ஹைக் விளங்குவார் என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன்" என்று உற்சாகமாக கூறுகிறார் தயாரிப்பாளர் அட்லீ.

"மற்ற எல்லா திகில் கலந்த நகைச்சுவை படங்களில் இருந்தும் எங்களின் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். முழுக்க முழுக்க குடும்பங்கள் ரசிக்க கூடிய திரைப்படமாக எங்களின் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தை உருவாக்கி இருக்கின்றோம். என்னுடைய முதல் படத்திலேயே அட்லீயின் 'A for Apple', மற்றும் 'Fox Star Studios' நிறுவனங்களோடும், என்னுடைய நெருங்கிய உறவினர்களான ராதா ரவி மற்றும் ராதிகா சரத்குமார் அவர்களோடும் இணைந்து பணியாற்றி இருப்பதை பெருமையாக கருதுகின்றேன். 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படம் மூலம் முதல் முறையாக திரையில் ஜோடி சேரும் ஜீவா - ஸ்ரீதிவ்யா, நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்து செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது" என்று உற்சாகத்துடன் கூறுகிறார் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் இயக்குநர் ஹைக்.

SANGILI BUNGILI KADHAVA THORAE

First look to be unveiled on 3rd & the teaser on 4th of Feb

Films with unique titles always increases the expectation level of audiences, and if it is produced by a top-notch director and backed by a studio which has consistently delivered blockbuster hits, then the expectation level becomes all the more huge. ‘SANGILI BUNGILI KADHAVA THORAE’, which is being presented by Fox Star Studios and produced by Atlee under the banner ‘A for Apple’ stars Jiiva, Sridivya & Soori and its first look and teaser will be launched this week. The film is directed by debutante Ike, the grandson of Nadigavel M. R. Radha and a former associate of director Priyadarshan. Ike was also been a part of the direction team for Kamal Haasan’s ‘Vishwaroopam’ and its sequel.

The film SBKT aka ‘SANGILI BUNGILI KADHAVA THORAE’ also has ‘Datuk’ Radha Ravi and Radhika Sarathkumar in crucial roles and has an ensemble cast including Thambi Ramaiah, Kovai Sarala, ‘Naan Kadavul’ Rajendran, Mayilsamy, Devadarshini and Ilavarasu.

Vijay Singh, CEO, Fox Star Studios says “We are delighted to have partnered with Atlee for his first film as a producer. We have had a fantastic partnership with Atlee on his debut film ‘Raja Rani’, and are proud to have backed such a talented and gifted film maker. In our endeavors to back new and exciting talent, we along with Atlee are happy to back Ike’s vision, and are confident that audiences will love ‘SANGILI BUNGILI KADHAVA THORAE’ - a film we are very proud of!.”

Atlee, who’s currently shooting his next film with Vijay adds “I am indeed delighted that ‘SANGILI BUNGILI KADHAVA THORAE’ is my first production as it’s a wholesome family entertainer. It’s a privilege to produce this film for the company through which I had made my debut as a director. I am proud to introduce Ike as a director in this film, and can promise that he is going to go a long way in our industry.”

“Sangili Bungili Kadhava Thorae is a wholesome family entertainer in the horror-comedy genre, which will be loved by all sets of audiences. I feel proud to be associated with Atlee’s A for Apple and Fox Star Studios in my very first film. Though this is the season of horror-comedy, I am quite confident that our SBKT will stand out from other such films, in which both my Uncle Radha Ravi and Aunt Radhika Sarathkumar have played crucial roles. For the first time Jiiva and Sridivya have paired up for a Tamil film and I am sure that the audiences will love their onscreen chemistry” says Ike, the Director of ‘Sangili Bungili Kadhava Thorae’ enthusiastically.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE