சரத்குமார் இரு வேடங்களில் நடிக்கும்
“சண்டமாருதம்”
மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் சரத்குமார்,ராதிகா சரத்குமார்,லிஸ்டின்ஸ்டீபன் இணைந்து தயாரிக்க புரட்சிதிலகம் சரத்குமார் வித்தியாசமான இரு வேடங்களில் நடிக்கும் சண்டமாருதம் என்ற திரைப் படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது.
இந்த படத்தின் கதாநாயகிகளாக சரயு, அவ்னி மோடி நடிக்கிறார்கள்.
முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார். மற்றும் விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, டெல்லிகணேஷ், காதல் தண்டபாணி , ஆதவன், பாபூஸ், அவினாஷ், மாளவிகா, கானா உலகநாதன் நடிக்கிறார்கள். இவர்களுடன் கன்னடத் திரையுலகின் பிரபல நடிகர் அருண்சாகர் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் ராதிகா சரத்குமார் நடிக்கிறார்.
இப்படத்திற்கு சரத்குமார் கதை எழுத, திரைக்கதை வசனம் எழுதுகிறார் கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்.
ஒளிப்பதிவு N.S.உதய்குமார். இவர் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தின் உதவியாளர்.
நா.முத்துக்குமார் பாடல்களுக்கு ஜேம்ஸ்வசந்தன் இசையமைக்கிறார்.
எடிட்டிங்: V.T. விஜயன் , கலை : மணிமொழியன் ராமதுரை ,
ஸ்டண்ட் : ஸ்டண் சிவா, நடனம் : கல்யாண், சிவசங்கர்
தலைமை செயல் அதிகாரி : பா.சக்திவேல். தயாரிப்பு ஒருங்கினைப்பு : A.N. சுந்தரேசன், தயாரிப்பு மேற்பார்வை : சபரிஷ் வினோத்
தயாரிப்பு: R.சரத்குமார் திருமதி ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன்.
சரத்குமார் நடித்த ஏய், மகாபிரபு, சாணக்கியா போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இப்படத்தை இயக்குகிறார்.
இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு மதுரை,பழனி,பொள்ளாச்சி ,பூனே, வாரணாசி போன்ற இடங்களில் தொடர் படப்பிடிப்பாக நடை பெற்று ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது.
இத்திரைப்பட விழாவிற்கு தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்திரி, டி.ஜி.தியாகராஜன்,டி.சிவா, கே.முரளிதரன், பட்டியல்சேகர், சுவாமிநாதன், அருள்பதி, ராமவாசு, கரு.நாகராஜன், இப்ராஹீம் ராவுத்தர், ஹேம்நாத்பாபு, தேனப்பன், சித்ராலட்சுமணன், எச்.முரளி, கே.எஸ். ஸ்ரீனிவாசன், முருகன்,முரளிதரன், ஐஸ்ஹவுஸ் தியாகு.
நடிகர்கள் ராஜ்கிரண்,அருண்விஜய், மிதுன், ராம்கி, மனோபாலா, குண்டுகல்யாணம், கும்கிஅஸ்வின்.
மற்றும் இயக்குனர்கள் சுந்தர்.சி , ஏ.எல்.விஜய், மிஸ்கின், பவித்ரன், பாலாஜிமோகன், ராஜமோகன், ஸ்ரீபிரியா, டாக்டர் உதயகுமார், எம்.என்.கே.நடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
நடிகர் சரத்குமார், கதாநாயகிகள் சரயு, அவ்னி மோடி பங்கேற்ற முதல் காட்சி சென்னை மைலாப்பூரில் உள்ள அப்பர்சாமி கோவிலில் நடைபெற்றது.
விழாவிற்கு வந்த அனைவரையும் ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் மலர்கொத்து வழங்கி கௌரவித்தனர்.