பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் `தபாங் 3’ படத்தின் படப்பிடிப்பு, மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் தொடங்கியுள்ளது. இந்த படத்தின் நாயகியாக சோனாக்ஷி சின்ஹா நடிக்கவுள்ளார். இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள,சல்மான், பிரபுதேவாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 2009ல் சல்மான் கான் நடிப்பில் திரைக்கு வந்த 'வான்டட்’ படத்தை இயக்கியிருந்தார் பிரபுதேவா. அதனையடுத்து 10 வருடங்களுக்கு பிறகு, தபாங் 3 திரைப்படத்தின் மூலம் மீண்டும் சல்மான் கானை, பிரபுதேவா இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.