*மியூசிகல் சென்ஷேசன் சாய் அபயங்கர், ஷேன் நிகாமின் “பல்டி” படத்திற்கு இசையமைக்கிறார்!!*
*“பல்டி” படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் அபயங்கர் !!*
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது ஷேன் நிகாமின் 25வது படமான “பல்டி” படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
இத்திரைப்படம் இயக்குநர் உன்னி சிவலிங்கம் என்பவரின் அறிமுக முயற்சியாகவும், இசைக்கும் , ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவும் உருவாகி வருகிறது. மேலும் வரும் திருவோண பண்டிகை வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் அதிரடி ஆக்சன் களத்தில், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.
சாய் அபயங்கர் இப்படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடதக்கது. இதற்காக வெளியான ஒரு பிரத்யேக ப்ரோமோ வீடியோவில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு போன் கால் மூலம் சாய் அபயங்கரை மலையாள திரையுலகிற்கு வரவேற்கும் காட்சி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. வீடியோவின் முடிவில் “பல்டி ஓணம்” எனும் வாழ்த்தும், சாய் அபயங்கரின் பெயர் பொறித்துள்ள “பல்டி ஜெர்ஸி”- யுடன் மோகன்லாலின் வாழ்த்தும் இடம் பிடித்திருப்பது ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது.
சாய் அபயங்கர் பிரபல பின்னணிப் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. யூட்யூபில் மட்டும் 200 மில்லியன் பார்வைகளை கடந்த அவரது ஆல்பம் பாடல்கள், இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இப்போது மலையாள சினிமாவில் கலக்கலாக கால் பதித்திருக்கும் சாய், தற்போது தமிழ் சினிமாவிலும் முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வருகிறார். முன்னணி நட்சத்திரங்களின் படங்களான 'சூர்யா 45' (சூர்யா நடிப்பில்), ' STR 49 ' (சிலம்பரசன் நடிப்பில்), 'டூயூட்'- DUDE '(பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்), லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 'பென்ஸ்' ஆகிய படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
“பல்டி” படத்தினை தயாரிப்பாளர்கள் சந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர், STK Frames மற்றும் Binu George Alexander Productions நிறுவனங்கள் சார்பில் இணைந்து தயாரிக்கின்றனர். இசை மற்றும் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் அளித்துள்ள இப்படத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.
தொழில்நுட்பக் குழு விவரங்கள்:
ஒளிப்பதிவு – அலெக்ஸ் J. புலிக்கல்
பாடலாசிரியர் – வினாயக் சசிகுமார்
கலை இயக்கம் – ஆஷிக் S
உடைகள் – மெல்வி J
ஆக்ஷன் – ஆக்ஷன் சந்தோஷ் & விக்கி மாஸ்டர்
மேக்-அப் – ஜிதேஷ் போய்யா
ஒலி வடிவமைப்பு – விஷ்ணு கோவிந்த்
கலர் கிரேடிங் – ஸ்ரிக் வாரியர்
ஸ்டில்ஸ் – சுபாஷ், சஜித் ஆர்.எம்
VFX – ஆக்ஸெல் மீடியா, ஃபாக்ஸ் டாட் மீடியா
சவுண்ட் மிக்ஸிங் – M.R. ராஜகிருஷ்ணன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் – பென்னி கட்டப்பன
நடனம் – அனுஷா
இணை இயக்குநர்கள் – ஸ்ரீலால் எம், சபரி நாத், மெல்பின், சாம்சன் செபாஸ்டியன், ராகுல் ராமகிருஷ்ணன்
தயாரிப்பு மேலாளர் – கிஷோர் புரக்கட்டிரி
CFO – ஜோபீஷ் ஆன்டனி (STK Frames), COO – அருண் சி தம்பி
விநியோகம் – Moonshot Entertainments Pvt. Ltd
இசை வெளியீட்டு நிறுவனம் – Think Music
டைட்டில் டிசைன் – Rocket Science
விளம்பர வடிவமைப்பு – Viyaaki
மார்க்கெட்டிங் & புரமோஷன் – Snakeplant LLP
மக்கள் தொடர்பு - யுவராஜ்