இமான் – அனிரூத் - ரோகேஷ்
வெற்றிக் கூட்டணி உருவாக்கிய பாட்டு
ரோமியோ – ஜூலியட் படத்திற்காக
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் “ ரோமியோ ஜூலியட்” ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி - பூனம்பாஜ்வா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் வம்சிகிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
வசனம் - சந்துரு / இசை - D.இமான்
பாடல்கள் மதன்கார்க்கி, தாமரை / கலை - மிலன் / நடனம் - ஷெரீப் ஸ்டன்ட் - திலீப்சுப்பராயன் / எடிட்டிங் - ஆண்டனி / தயாரிப்பு நிர்வாகம் - ரமணா , A.K.கார்த்திக் / தயாரிப்பு மேற்பார்வை - K.K.ரவி / தயாரிப்பு வடிவமைப்பு - A.K.சேகர்
தயாரிப்பு - எஸ். நந்தகோபால்
கதை, திரைக்கதை எழுதி இயகுகிறார் லக்ஷ்மன் . படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்... அனேகன் படத்தில் சூப்பர்ஹிட் ஆன " டங்கா மாரி ஊதாரி " பாடலை எழுதிய ரோகேஷ் எழுதி, இமான் இசையில் அனிரூத் பாடிய
“ டண்டனக்கா
எங்க தல எங்க தல டீ ஆரு
சென்டிமென்ட்டுல தார்மாறு
மைதிலி என்னை காதலி”ன்னாரு
அவரு உண்மையா
லவ் பண்ண சொன்னாரு
மச்சான் – அங்க தான்டா
எங்க தல நின்னாரு” என்ற இந்த கானா பாடல் பதிவு செய்யப்பட்டது.
இன்றைய இளைஞர்களின் செல்லப் பாடலாக இது அமோக வரவேற்பை பெரும் என்பதில் ஐயமில்லை.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக சிறப்பாக வந்திருக்கிறது ரோமியோ ஜூலியட் பெரிய வெற்றிப் படமாகும் என்றார் இயக்குனர் லஷ்மன்.
no images were found