இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில் வெளியான ராக்கி படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
வட சென்னையில் பெரும் ரவுடியான பாரதிராஜாவுக்கும், வசந்த் ரவிக்கும் ஏதோ ஒரு பெரும் பகை. சிறைதண்டனை முடிந்து தன் அம்மா, தங்கையைப் பார்க்க வருகிறார் வசந்த் ரவி. அவரது அம்மா பாரதிராஜாவால் கொல்லப்பட்ட உண்மை தெரிகிறது. தங்கை ரவீணா எங்கு போனார் என்றே தெரியவில்லை. எப்படியோ தங்கையைக் கண்டுபிடித்து போகிறார். அங்கு வந்து ரவீணாவைக் கொல்கிறார்கள் பாரதிராஜா ஆட்கள். பழிக்குப் பழி வாங்க பாரதிராஜாவைத் தேடிப்போகிறார் வசந்த் ரவி. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரே காட்சி, எதற்காக அத்தனை நீளமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது எனத் தெரியவில்லை. ஆரம்பத்தில் வசந்த் ரவி நடக்கிறார், நடக்கிறார், நடந்து கொண்டே இருக்கிறார். ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கண்ணம்மா நடந்ததை விட அதிக தூரம் நடந்திருப்பார் போலிருக்கிறது. அதன்பின் காரை ஓட்டிக் கொண்டு செல்கிறார், செல்கிறார், சென்று கொண்டேயிருக்கிறார்.
