மும்பை சினிமா தியேட்டரில் பாப்கார்ன் விற்கும் அரவிந்த்சாமி பெரிய தாதா. மோதல் ஒன்றில் இவர் பழைய நினைவுகளை இழந்துவிட அவர் கொண்டு சென்ற ரூ 30 கோடி மதிப்புள்ள தங்கம் மாயமாகிறது. அவருக்கு பழைய நினைவை வரவழைத்து தங்கம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவர குஞ்சக்கோ போபனை ஒரு கூட்டம் ரூ 25 லடசம் சன்மானம் பேசி அனுப்பி வைக்கிறது. குஞ்சக்கோ போபன் அரவிந்த்சாமியிடம் நட்பாக பழகி தங்கம் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முயல்கிறார். முன்பு சண்டை நடந்த இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். அந்த இடத்துக்கு சென்றதும் அரவிந்த் சாமி குஞ்சக்கோ போபனை சுற்றி வளைத்து தங்கம் பதுக்கிய இடத்தை சொல்லும்படி துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார். குஞ்சக்கோ அதிர்ச்சி அடைகிறார். தன்னை அரவிந்த்சாமி மிரட்டுவது ஏன் என்று புரியாமல் திகைக் கிறார். அதன்பிறகு நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் அதிரடி யாக பதிலளிக்கிறது.அடுத்தடுத்து என்ன நடக்கின்றது என்பதை இவ்வளவு விறுவிறுப்பாக சொல்லிவிடமுடியுமா என்று ஆச்சிரியப்படும் அளவிற்கு கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் பெளினி டிபி. எஸ் சஞ்சீவின் திரைக்கதையும், சசிகுமார் சிவகுருவின் நறுக்குத்தெறித்தாற்போன்ற வசனங்களும் ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைத்து படத்துடன் ஒன்றிப்போக வைக்கின்றது.கோவாவில், கோதாவில் களமிறங்கும் அரவிந்த்சாமி, நான் வெறும் சாக்லேட் பாய் ஹீரோ இல்லடா அதிரடி ஆக்ஷனும் செய்வேன் டா என்கிற மாதிரி சண்டைக்காட்சிகளில் பட்டையை கிளப்புகிறார்.குஞ்சக்கோ போபன் ஆக்ஷன் காட்சிகளில் தடுமாறுவதுபோல் காட்டி கிளைமாக்ஸில் அவர் ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்க விடும்போது சபாஷ்போட வைக்கி றார்.அரவிந்த்சாமியை குஞ்சக்கோ கடத்தி செல்கிறார் என்று நினைத் தால் அரவிந்த்சாமிதான் குஞ்சக் கோவை ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறார் என்ற விவரம் தெரியும்போது எதிர்பாராத ஷாக் பரவுகிறது.சில சஸ்பென்ஸ்களை இங்கு உடைக்காமலிருந்தால்தான் படம் பார்க்கும்போது அந்த ஃபீல் கிடைக்கும்.அதிர்ஷ்டவசமாக, சதித்திட்டத்தின் டிக்-டைம்-பாம்ப் தன்மை பதற்றத்தை உறுதி செய்கிறது. இசை, அருள்ராஜ் கென்னடி, ஏ.எச்.காஷிப் மற்றும் கைலாஸ் மேனன். அரவிந்த் ஸ்வாமி தனது கதாபாத்திரத்தை நமக்கு விற்கும் வேலையை நன்றாக செய்கிறார், மேலும் அவருக்கு நம்மை வேரூன்ற வைக்கிறார். இதனால்தான் இறுதியை நோக்கிய திருப்பங்கள் நன்றாக வேலை செய்கின்றன. பளிச்சிடும் படத்தொகுப்பும் எழுத்தை உயர்த்த உதவுகிறது, இதனால் நாம் ஓரளவு ஈடுபாடு கொண்டுள்ளோம். ஆனால் இது எப்படி ஒரு சிறந்த அதிரடி நாடகமாக இருந்திருக்கும் என்ற நச்சரிப்பு உணர்வு நம்மை விட்டு நீங்காது.
