-0.1 C
New York
Saturday, January 25, 2025

Buy now

spot_img

‘Record Break’ to release in eight languages ​​on March 8

நடிகை ஜெயசுதா மகன் நிஹார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ரெக்கார்ட் பிரேக்’ படம் எட்டு மொழிகளில் எட்டுத் திக்கும் மார்ச் 8 அன்று வெளியாகிறது…இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது!

ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரிப்பில் நிஹார், நாகர்ஜூனா, ராக்தா இஃப்திகர் நடித்திருக்கும் படம் ‘ரெக்கார்ட் பிரேக்’. மார்ச் 8 அன்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நடிகர் நாகர்ஜூனா, “இது எனக்கு முதல் படம். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. படம் பார்த்து நிச்சயம் மகிழ்வீர்கள்” என்றார்.

நடிகர் நிஹார், “இது என்னுடைய இரண்டாவது படம். கடந்த ஐந்து வருடங்களாக இந்த படத்திற்காக நாங்கள் கடுமையாக உழைத்து உள்ளோம். விஎப்எக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும் என விரும்புகிறோம். அதனால் தான் தெலுங்கு உட்பட எட்டு மொழிகளில் இந்த படத்தை டப்பிங் செய்திருக்கிறோம். பெரிய திரையில் பார்க்கும்பொழுது அதன் அனுபவத்தை உங்களால் உணர முடியும். யாரும் இல்லாதவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக அவர்களால் சாதிக்க முடியும் என்பதை இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். உங்களுக்கும் படம் பிடிக்கும்”.

நடிகை ராக்தா, ” நான் முதல் முறையாக சென்னைக்கு வந்து இருக்கிறேன். இந்த படம் ஒரு சிறந்த கருத்தை பேசி இருக்கிறது. தெலுங்கு பார்வையாளர்கள், தமிழ் பார்வையாளர்கள் என இல்லாமல் எல்லோருக்குமான பான் இந்தியா படமாக இது உருவாகி இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். இந்தப் படத்தை உருவாக்கிய ஸ்ரீனிவாஸ் சாருக்கு நன்றி. மார்ச் 8 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது”.

நடிகை சத்யா, ” மார்ச் 8 அன்று இந்த படத்தை நாங்கள் வெளியிடுகிறோம். எட்டு வெவ்வேறு மொழிகளில் இந்த படத்தை டப் செய்து இருக்கிறோம். ரொம்ப வித்தியாசமான கதை இதில் உள்ளது. நீங்கள் நிச்சயம் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும். உங்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டும்”.

தயாரிப்பாளர், நடிகர் பிரசன்னா குமார், “எட்டு மொழிகளில் மார்ச் 8 அன்று இந்த படம் வெளியாகிறது. மார்ச் 8 மகா சிவராத்திரி மற்றும் பெண்கள் தினம் அதற்கேற்றார் போல ஆன்மீகம் மற்றும் பெண்களுக்கு வலுவான கன்டென்ட் இந்த படத்தில் உள்ளது. அம்மா செண்டிமெட்ண்ட் மற்றும் விவசாயிகள் பிரச்சினையும் இதில் பேசப்பட்டுள்ளது. ரெஸ்லிங்கில் எப்படி ஹீரோ போட்டிப் போட்டு எதிர்நாடான சீனா, பாகிஸ்தானை ஜெயிக்கிறான் என்பதுதான் ‘ரெக்கார்ட் பிரேக்’. படம் நிச்சயம் ஹிட் ஆகும்”.

இயக்குநர் அஜய்குமார், ” படத்தின் இயக்குநர் ஒரு புதிய கான்செப்ட்டோடு வந்திருக்கிறார். ஏனெனில், இதில் லவ் ஜானர், ஃபேமிலி ஜானர், க்ரைம்- த்ரில்லர் என எதற்குள்ளும் இதை அடைக்க முடியாத புதிய கான்செப்ட். படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும். உங்களுடைய வாழ்த்துக்களை அவர்களுக்கு சொல்லுங்கள்”.

பிரசாத், “ஸ்ரீனிவாஸ் சார் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவக்கூடிய நல்ல உள்ளம் கொண்டவர். கொரோனா சமயத்தில் திரைத்துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு, இப்போது திறந்திருக்கும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வுட் (wood) என பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். ‘பிச்சைக்காரன்’ படம் வெளியான சமயத்தில் விஜய் ஆண்டனிக்கு தெலுங்கில் பெரிதாக மார்க்கெட் இல்லை. ஆனால், கதை மீது நம்பிக்கை கொண்டு ‘பிச்சக்காடு’ என பெயர் வைத்து அங்கு வெளியிட்டார். படம் தமிழை விட தெலுங்கில்தான் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல, ‘ஹனுமன்’ படமும் 20-30 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு பல மொழிகளிலும் சேர்த்து ரூ. 500 கோடி வசூல் செய்தது. அதேபோல தான் இந்த படத்தின் கதை மீதும் நம்பிக்கை வைத்து எட்டு மொழிகளில் உலகம் முழுவதும் மார்ச் 8 அன்று வெளியிடுகிறோம். படம் நிச்சயம் வெற்றி பெறும்”.

இயக்குநர், தயாரிப்பாளர் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் பேசியதாவது, “சென்னை விஜயா கார்டனில்தான் எனது சினிமா வாழ்க்கைத் தொடங்கியது. யாரும் இல்லாத கதாநாயகன் சிறுவயதிலிருந்து கிடைக்கும் வேலைகளை கஷ்டப்பட்டு செய்து வருகிறான். ஆனால், அவன் வளர்ந்து ஒரு விளையாட்டு ஆர்வத்துடன் போகும் பொழுது என்ன நடக்கிறது என்பதுதான் கதை. மனிதர்களாக நாம் அனைவரும் இங்கு சமம். படத்தின் கதை மீது எனக்குப் பெரிய நம்பிக்கை உண்டு. அதை நீங்கள் திரையரங்குகளில் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படத்தை எனக்கு பிடித்த தமிழ் மக்களுக்கும் காட்டுவது ரொம்ப சந்தோஷம். மார்ச் எட்டு அன்று திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE