ரவீந்தர் சந்திரசேகரனின் தயாரிப்பில்
“நளனும் நந்தினியும்”
இந்த படத்தில் மைக்கேல் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
நந்திதா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.மற்றும் சூரி, ஜெயபிரகாஷ், அழகம்பெருமாள்,சாம்ஸ் ரேணுகா,மதுரை ஜானகி,மதுமிதா,ரவிராகுல்,சௌந்தர்ராஜன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் ஆர்.வெங்கடேசன்… குடும்பங்களை எதிர்கொண்ட காதல், புரிதல் இல்லாமல் திருமணத்தில் முடிய, பல இன்னல்களைக் கடந்து வெற்றியடைந்து குடும்பங்களை எப்படி இணைக்கின்றது என்பதே இந்த படத்தின் கரு.
படத்தின் படபிடிப்பு மதுரை கானூரில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தொடக்கத்தில் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு படபடப்பானது ஏனெனில் அப்பொழுது அந்த ஊரில் தொடர் கொலைகள் நடைபெற்றது ஆகையால் அங்கு பெரிய போலீஸ் கும்பலே குவிந்தது. மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. உயிர் பயத்திலும் நாங்கள் படபிடிப்பை நடத்தினோம். அப்பொழுது போலீஸ் எங்களை எச்சரித்தது இருந்து அவர்களிடம் பேசி சமாளித்து படப்பிடிப்பை நடத்தினோம்.
தயாரிப்பாளரும், ஊர்மக்களும் எங்களுக்கு உறுதுணையாக இருந்தது சிறப்பு என்று கூறினார் வெங்கடேசன்.
படம் ஜூலை 11 ம் தேதி அன்று உலகமுழுவது வெளியாகிறது.